பக்கம்:இல்லற நெறி.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்பக் கட்டுப்பாடு 畿份器

குவமடைவதற்கு முன்னுள்ள கருத்தரியா நாட்கள், முட்டை பக்குமடையும் காலத்தைச் சுற்றியுள்ள கருத்தரி நாட்கள் முட்டை பக்குவைைடந்த பிறகு உள்ள கருத் தரியா நாட்கள் என்பவை எவ்வளவு நாட்கள் விந்தணுக் கள் உயிருடன் பெண் பிறப்புறுப்புப் பாதையில் தங்கியிருக் கும் என்பதைச் சரியாக அறுதியிட முடியாதாதலின், முற் பகுதி அவ்வளவு நம்பத் தகுந்ததன்று. மூன்ருவது பகுதியில் கருவுறத்தக்க முட்டை உயிருடன் இருப்பது சாத்தியமாகன தாதலின், இப்பகுதி மிகவும் நம்பத் தகுந்ததாகும்:

நடைமுறையில் நாம் மாதவிடாய் வட்டத்தை மூன்று சமப் பகுதிகளாகப் பிரித்து முதற்பகுதியை ஒரளவு நம்பக மான கருத்தரியாக் காலம் என்றும், இரண்டாம் பகுதியை கருத்தரி காலம் என்றும். மூன்ரும் பகுதியை முற்றிலும் நம்பகமான கருத்தரியாக் காலம் என்றும் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, ஒரு பெண் 30 நாட்களுக்கொரு முறை தூரமானுல் முதல் 10 நாட்கள் அவள் கருத்தரியாள்; அடுத்த 10 நாட்கள் அவள் கருத்தரிப்பாள்; இறுதி நாட் கள் அவள் நிச்சயம் கருத்தரிபாள்.

முற்றிலும் இம்முறையையே நம்பி மேற்கொள்ளும் மக வளிடம் இம்முறை தவறுதலும் உண்டு. பெரும்பாலும் எடு கோள்களைச் சேகரிப்பதில் செய்யும் தவறுதல்களும், அவற் றைக்கொண்டு கணக்கிடுவதில் நேரிடும் தவறுதல்களுமே இதற்குக் காரணங்களாகும். எனினும், சிலரிடம் உடல்நிலை யும் உள்ளக் கிளர்ச்சி. நிலையும் . எதிர்பாராத வண்ணம் மாத விடாய் வட்டத்தின் கால அளவையும் முட்டை பக்குவ மாகும் நாளையும் மாற்றிவிடுவதால் தவறுதல் நேரிடுகின் றது. இதல்ைதான் சில பெண்கள் இம்முறையை மேலதிக முறையாக அல்லது மாற்று முறையாகக் கொள்ளுகின்

அ1: எடுகோள்-Data 82. Gudavás gpsop—Additional method 33. IDsrst pigpo sp-Alternate method

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/271&oldid=598139" இலிருந்து மீள்விக்கப்பட்டது