பக்கம்:இல்லற நெறி.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்பக் கட்டுப்பாடு ż7 È

கைவிடுபவர்களிடம் இந்நோய் குறைவதினின்றும் இது தெளிவாகின்றது.

எப்பொழுது விந்து வெளிப்படும் என்பதைப் பெரும் பாலும் மிகச் சரியாக உணர முடிவதில்லை. தவிரவும், ஆண் குறியை இழுப்பதற்கு முன்னர் வெளிப்படும் திரவக் கசிவின் ஒன்றிரண்டு துளி பாய்மத்தில் உள்ள விந்தனுக்களாலும் பெண் கருவுறுதல் கூடும். முதற்கலவியில் பெண்ணுக்குத் திருப்தி ஏற்படவில்லையே என்று கருதும் ஆண் இரண்டா வது கலவி புரியும்பொழுது முதற் கலவியினல் ஆண் குறியின் சிறு நீர்ப்புற வழியிலோ அன்றி எபிடிடைமிளிலோ ஒட்டிக் கொண்டிருக்கும் ஒன்றிரண்டு விந்தனுக்கள் விந்து வெளிப் படுவத குமுன் ஏற்படும் திரவக் கசிவில் வெளிப்பட்டும் பெண் கருவுறலாம். இதல்ை இம்முறை முற்றிலும் நம்பத் தகுந்ததன்று.

விந்து பாய்ச்சா இணைவிழைச்சு : மேற்குறிப்பிட்ட இடையிட்டு இணைவிழைச்சினைப் போன்றே மற்ருெரு முறை உள்ளது. இதனை விந்து பாய்ச்சா, இணைவிழைச்சு' என்று வழங்குகின்றனர். இதில் ஆண் நெடுநேரம் இடை நிறுத்த மின்றிக் கலவி புரிந்தாலும் விந்தினை வெளிப்படுத்தாது அடக்குகின்ருன். இவ்வாறு அடக்குவதற்கு உடற் கட்டுப் பாடும் உள்ளக் கிளர்ச்சிக் கட்டுப்பாடும் பெரிதும் வேண்டும். இத்தகைய பயிற்சியினையுடைய ஆண்கள் இன்றும் இருப்ப தாகக் கூறுகின்றனர். இம்முறையினல் யாதொரு தீங்கும் நேரிடுமா நேரிடாதா என்பதை இன்னும் மருத்துவ உலகம் உறுதிப்படுத்தவில்லை.

ஆணுறையை" அணிதல்: ஆன் முறைகளில் இரண் டாவது முறை ஆணுறுப்பில் உறையை அணிந்து கொள்வ தாகும். இதல்ை விந்தனுக்கள் பெண்ணின் யோனிக் குழலி னுள் நுழையாமல் தடை செய்யப்பெறுகின்றன. இந்த

48. விந்து பாய்ச்சா @&sorsosopé-Coitus reservatsu 47. Asolop-Sheath or condom

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/277&oldid=598151" இலிருந்து மீள்விக்கப்பட்டது