பக்கம்:இல்லற நெறி.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்பக் கட்டுப்பாடு 認7尋

யாலும் இம்முறை அதிகமாகக் கையாளப்பெற்று வரு கின்றது:

பயன்படுத்தும்முன் கவனம்: இம்முறையில் உறையைப் பயன்படுத்துவதற்கு முன்னர் அதனை நன்கு சோதித்து அதில் சிறு துளைகள் இல்லையென உறுதி செய்துகொள்ள வேண் டும். பழுதான உறைகளில் சிறு துவாரங்கள் இருத்தல் கூடும். ஆகவே உறைகளைப் பயன்படுத்துவதற்கு முன்னர் இரப்பர்க் குமிழ் களைப்போல் ஊதி நல்ல ஒளிக்கு முன்னர் வைத்துப் பார்த்தால் துளைகள் இருப்பதும் இல்லாததும் தெரிந்துவிடும். இவ்வுறையைப் பயன்படுத்தியபிறகு அது தானுக நழுவி அதிலுள்ள விந்து பெண்ணுப்பில் சிந்த நேரிடலாம். ஆகவே ஆணுறுப்பைப் பெண்ணுறுப்பிலிருந்து எடுக்கும் பொழுது உறையை நன்கு கையினுல் பிடித்துக் கொண்டு எடுக்க வேண்டும். சில சமயம் பயன்படுத்தும் பொழுது உறை கிழிந்துபோகவும் நேரிடலாம். இவ்வாறு நேரிடாமலிருப்பதற்குக் கருவுறுதலைத் தடுக்கும் மருந்து வகைகளில் ஒன்ருன பாகுப் பொருளை வழுக்கிடு பொரு ளாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தப் பொருளை உறையின் உட்புறமும் வெளிப்புறமும் நன்கு தடவிப் பயன் படுத்தினுல் இஃது அதிகப் பாதுகாப்பு தருவதுடன் கிழியா மலும் அசெளகரியம் இல்லாமலும் இருக்கின்றது; பயன் படுத்துங்கால் இது கிழிந்துவிட்டால் புணர்ச்சிக்குப் பின்னர் பெண்ணின் பிறப்புறுப்பு வழியை நன்ருக கடுஷ்' செய்து'

50. இரப்பர்க் குமிழ்கள்-Baloons

51. பாகுப் பொருள்-jelly

5ž at(tp &&G GLJirgéir-Lubricant

53. douche-என்ருல் நீர்த்தாரை போன்ற அமைப்பி ஞல் பெண்ணுறுப்பின் உட்புறத்தில் நீர் வேகமாகப் பாயும் படி செய்து அதனைக் கழுவுதல். இதற்குத் தூய்மையான நீர் அல்லது மருந்து கலந்த நீர் பயன்படுத்தப்பெறும்,

@一18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/279&oldid=598155" இலிருந்து மீள்விக்கப்பட்டது