பக்கம்:இல்லற நெறி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

இல்லற நெறி


ஆணிடமும் பெண்ணிடமும் தீவிரமான கவர்ச்சி ஏற்படு மாயின், அஃது டலுறவில் கொண்டு செலுத்தும் விழை வினே எழுப்பிவிடும் திருமணம் சமூக, சட்டபூர்வமான, அற ஒழுக்கத்தில் வழுவாத பாலுறவினை ஏற்படுத்து கின்றது. உயிரியல் அடிப்படையில் நோக்கினல் திருமணம் மக்கட்பேற்றுக்கு அடிகோலி மரபுவழிப் பெருக்கத்தை வளர்க்கின்றது. குழவிகளைப்போற்றி வளர்த்துத் தக்க பாது காப்பு அளிக்கும் பழக்கம் எந்த உயிரினத்தினிடத்தும் இராத சிறப்பு முறையில் மனிதனிடம் அமைந்துள்ளது: மனிதன் தன் மக்கள். அவர்களுடைய மக்கள், வருங்கால சந்ததியினர் ஆகியவர்கட்கெல்லாம் பாதுகாப்பு அளிக்கும் முறையில் பொருளாதாரத்திட்டம், க ல் வி த் தி ட் டம் போன்ற திட்டங்களை வகுப்பதை எண்ணி ஒர்க. எனவே, திருமணம் என்பது இணைவிழைச்சுக்கு மட்டுமன்று; இனப் பெருக்கத்திற்குமாகும். நாகரிக அடிப்படையில் அமைந்த இனப்பெருக்கமே மானிட இனத்தின் சிறப்பியல்பாகும்:

பொருளாதாரப் பொருத்தம்: உன்னுடைய பெற்ருேர் மணமகள் கொண்டு வரும் பரிசத்தைப்பற்றி அதிகமாக வற் புறுத்துவதால் திருமணம் நிகழ்தலில் தாமதம் ஏற்படுகின் றது என்று குறிப்பிட்டிருந்தாய். இன்று உலகியலில் எத் தனையோ மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. தொல்காப்பியத் தில் திருமணத்திற்கு ஒத்தபிறப்பு, ஒத்த ஒழுக்கம், ஒத்த ஆண்மை, ஒத்த வயது, ஒத்த உரு, ஒத்த அன்பு, ஒத்த நிறை, ஒத்த அருள், ஒத்த அறிவு, ஒத்த செல்வம் என்று பத்து வகைப் பொருத்தங்கள் கூறப்பெற் றுள்ளன. இக்காலத்தில் பெரும்பாலோர் பணத்தினையே அதிகம் வற்புறுத்துகின்றனர் செல்வம் மிக்க ஒரே மகன் உள்ள குடும்பத்தில் தம் மகளைக் கொடுக்க விரும்புகின்றனர் பெண்ணின் பெற்ருேர்; செல்வம் மிகுந்த ஒரே பெண் னுள்ள குடும்பத்தில் தம் மகனுக்குப் பெண் கொள்ள விரும்

8: urgypal—Sexual reationship 9. மெய்ப்-நூற் 25.(நச்).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/28&oldid=1285089" இலிருந்து மீள்விக்கப்பட்டது