பக்கம்:இல்லற நெறி.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

இல்லற நெறி


கொள்ள வேண்டும்; பயன்படுத்திய பிறகு உறையையும் சோப்புத் தண்ணீரில் நன்கு கழுவி உலர வைத்துப் பவுடர் தடவிக் கைப்படாத இடத்தில் வைக்கவேண்டும். உறை யைக் கெடுத்துவிடக் கூடிய எண்ணெய், கிரிஸ் போன்ற பசைகள் அதன் மீது படாமல் பாதுகாக்கவும் வேண்டும்: எவ்வளவு பாதுகாப்பு எடுத்துக் கொண்டாலும் ஒர் உறையை மூன்று அல்லது நான்கு தடவைகளுக்குமேல் பயன்படுத்த முடியாது.

குறைகள்: பெரும்பாலோர் இம்முறையைக் கையாண் டாலும் இதில் குறைகள் இல்லாமல் இல்லை. இந்த உறையை அணிந்து கொண்டு இணைவிழைச்சு புரியுங்கால் சில பெண் கள் எரிச்சலை உணர்கின்றனர். இதைத் தக்க முறையில் வழுக்கிடு பொருளைப் பயன்படுத்தித் தவிர்த்துக் கொள்ள லாம். இம்முறையில் இன்னொரு முக்கிய குறையுமுண்டு. ஆண்குறி விறைத்த நிலையில்தான் இவ்வுறையை அணிந்து கொள்ள முடியும். இதனால் இணைவிழைச்சு சிறிது நேரம் தடைப்படுகின்றது. சிலரிடம் இஃது அவர்கள் மனநிலையைப் பாதித்து இணைவிழைச்சுத் திறனையும் இணைவிழைச்சுத் துலங்கலையும் கெடுத்து விடுவதாகச் சொல்லுகின்றனர். ஆண்தன்மை குறைவாகவுள்ளவர்கட்கு இஃது பெருஞ் சங்கடமாக இருக்கும் என்பதை எடுத்துரைக்க வேண்டிய தில்லை. தவிரவும், உரையை அணிந்து கொள்வதால் ஆண் குறியும் பெண்குறியும் நேரான தொடர்பு கொள்வதில்லை. இதல்ை இருபாலரும் குறிகள் மோதுவதால் ஏற்படும் ஊற்றின்பத்தை இழக்க நேடுகின்றது.

பொதுவாக மேற்கூறிய ஆண் முறைகளில் இரண்டு குறைகள் இருப்பது தெரியவரும். இடிையிட்டு இணை விழைச்சும் உறையைப் பயன்படுத்திப் புனை ரும் முறையும் விந்துப் பாய்மம் பெண் உறுப்புப் பாதையில் பாய்வதைத்

54. Grifiáéré) - 1rritation 55. & wińsé-Response 56. st, siis sestroome-Potency

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/280&oldid=1285214" இலிருந்து மீள்விக்கப்பட்டது