பக்கம்:இல்லற நெறி.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்பக் கட்டுப்பாடு 隐7莎

தடுக்கின்றன. இந்தப் பாய்மத்தைப் பென்னின் யோனி வாய் உறிஞ்சுவதால் பெண்ணுக்கு ஏற்படக் கூடிய உடல் பற்றிய நன்மை இம்முறைகளைக் கையாளுவதால் பெண்ணுக்கு இல்லாமல் போகின்றது; இஃது ஒரு குறை. இரண்டாவதாக, ஒரு பெண் கருத்தரியாப் பாதுகாப்பைப் பெற வேண்டுமாயின் இம்முறையில் அவள் ஆண்களை நம்பியே இருக்க வேண்டும். ஆண்கள் அசட்டையாகவோ அல்லது கவனக் குறைவாகவோ இருந்து விட்டால், அவளுக்கு இப்பாது காப்பு இல்லாது போய்விடும். பெரும் பாலும் குடும்பப் பொறுப்பில் பெண்களே அதிகக் கவனம் செலுத்துவார்களாதலின், குடும்பக் கட்டுப்பாட்டு முறை களிலும் பெண்களே பொறுப்பு ஏற்க்கக் கூடிய முறைகளைக் கையாளுவது நன்று. இனி, பெண் முறைகளைப் பற்றி அடுத்த கடிதத்தில் சற்றுவிரிவாக எழுதுவேன்.

அன்புள்ள, திருவேங்கடத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/281&oldid=598161" இலிருந்து மீள்விக்கப்பட்டது