பக்கம்:இல்லற நெறி.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

இல்லற நெறி


கருவியமைப்புகள் நீளத்திலும், கனத்திலும் வடிவ அமைப் பிலும் பலவகையாக உள்ளன. ஆனல், மேற்குறிப்பிட்ட இரப்பர்ப்பை-குழாய் மூக்கு அமைப்பினைக் கொண்ட கருவியே-எங்கனும் பெரு வழக்காக உள்ளது. இதஞல் யாதொரு தீங்கும் நேரிடுவதில்லை.

"சடுஷ்” முறையினை மட்டிலும் கையாண்டு கருவுறு தலைத் தடுக்க முடியும் என்று உறுதியாகச் சொல்ல முடி யாது. இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஆண் குறி யினின்றும் விந்து வெளியேறினதும், விந்தணுக்கள் கருப் பையினுள் நுழைவதற்கு வாய்ப்பு உள்ளது. புணர்ச்சி முற்றுப் பெற்றதும், கருப்பையில் ஒருவித உறிஞ்சுதல் ஏற் பட்டு அதனல் சிறிதளவு விந்து உள்ளே நுழைகின்றது என்று சிலர் கருதுகின்றனர்: ஆல்ை, அஃது இன்னும் மெய்ப்பிக்கப் பெறவில்லை. கடுஷ்' முறை யோனிக் குழ விலுள்ள விந்துவை அகற்றுமேயன்றி, கருப்பை வாயினுள்9ே புகுந்த விந்தணுக்களை ஒன்றும் செய்ய முடியாது. மேலும் யோனிக் குழலின் சுவர்களும் வழுவழுப்பாக இல்லை; அவை எண்ணற்ற மடிப்புகளாக அமைந்துள்ளன. ஆகவே, யோனிக் குழ ைநன்கு விரித்துச் செவ்வையாகக் கழுவாத வரை ஒரு சில விந்தனுக்கள் இந்த மடிப்புகளினுள் தங்கி "டுஷ்" திரவத்தில்ை பாதிக்கப்பெருமல் இருக்க ஏதுவுண்டு: சில பெண்மணிகள் அதிக நேரம் திருப்தியாக டுஷ்' செய்து கொன்டாலும் இம்முறையினால் ஏற்படும் தோல்வி யின் சதவிகிதம் அதிகமாகவே உள்ளது. எனவே, இம் முறையை முற்றிலும் நம்பத் தகுந்த முறையாகக் கொள்வ தற்கில்லை.

இம்முறையை மேற்கொள்ளத் கூடாதென்பதற்கு இன் ைெரு காரணமும் உள்ளது. புணர்ச்சி முடிந்தவுடன் டுஷ் செய்துகொள்ள வேண்டியிருப்பது மிகவும் விரும்பத் தக்க தன்று. புணர்ச்சிக்குப் பின்னர் கிறிது ஒய்வும் உடலை நெகிழ

59: 2-flojägå--Suction 60. கருப்பை வாய்-Cervix

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/284&oldid=1285216" இலிருந்து மீள்விக்கப்பட்டது