பக்கம்:இல்லற நெறி.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

இல்லற நெறி


உருளை வடிவமான மருந்தடைப்புகள் செய்யப்பெறுகின் றன: இந்த அடிப்படைப் பொருள்கள் சாதாரண வெப்ப நிலையில் திடப் பொருள்களாகவும், உடலின் வெப்பநிலையில் உருகக் கூடியனவாகவும் உள்ளன: இந்த மருந்தடைப்பினை யோனிக் குழலில் செருகிக் கொண்டால் அது கரைந்து தன் ணுடைய வேதியியற் கூட்டுப் பொருள்களை விடுவிக்கும்: அடிப்படை ப் பொருள் உருகியதும் அஃது எண்ணெய் அல் லது ஊன்பசை போன்ற படலத்தைக் கருப்பையின் வாயி வில் உண்டாக்கி விந்தணுக்கள் உட்புகாதவாறு ஒருவித அரணுக அமைகின்றன. அப்பொழுது விடுவிக்கப்பெறும் வேதியியற் கூட்டுப் பொருள்கள் விந்தணுக்களே அசையா நிலைக்கு உட்படுத்துகின்றன. எனவே, இந்த மருந்தடைப்பு திறனுடையதாக அமைய வேண்டுமாயின் அஃது உடனே கரைதல் வேண்டும். ஆல்ை, நடைமுறையில் அஃது அங்க னம் கரைவதில்லை. சில சமயம் செருகி அரைமணி நேரம் ஆனபிறகு கூட மருந்தடைப்புகள் உருகாது அப்படியே இருக்கின்றன. அவை உருகினலும், அவை கருப்பையின் வாயிலை மூடிக்கொள்வதில்லை. புணர்ச்சி முடிவுற்ற மிக விரைவில் விந்தணுக்கள் கருப்பையினுள் நுழைந்ததாகக் காணப்பெறுவதால் இம்மருந்தடைப்புகளால் பயன் இல்லை என்பது வெளிப்படையாகப் புலனுகின்றது. எனவே, இவ்வகை மருந்துகள் நம்பத் தகுந்தனவாக இல்ல்ை. மேலும், அவை உருகும் பொழுது அதிகமான வழுவழுப்புத் தன்மையை உண்டாக்குவதால் அவற்றைப் பெரும்பா லோர் வெறுத்தொதுக்குகின்றனர்: அமெரிக்கா போன்ற நாடுகளிலும் பல்வேறு வகைப் பொருள்களை வணிகர்கள் விளம்பரம் செய்து விற்கின்றனர்: எதிர்காலத்தில் நல்ல முறையில் இவ்வகை மருந்துகள் அமையலாம்:

மாத்திரைகளிலும் பவுடர்களிலும் குறைகள் இல்லாமல் இல்லை. மாத்திரைகள் கரைந்து ஒருவித வாயுவை விடுவிப்ப தோடன்றி, யோனிக்குழலினுள் ஒருவித நுரையையும்

66, assroot song-Gelatin

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/286&oldid=1285217" இலிருந்து மீள்விக்கப்பட்டது