பக்கம்:இல்லற நெறி.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்பக் கட்டுப்பாடு foss

பொறி நுட்பக் கருத்தடை முறைகள்: இனி, பொறிநுட் பக் கருத்தடை முறைகளைப்பற்றிச் சிறிது கூறுவேன்: பொறிநுட்ப அமைப்புக் கருவிகளைக் கொண்டு விந்தனுக்கள் யோனிக் குழலினின்றும் கருப்பையின் வாயினே அடையாமல் தடுப்பதே இம் முறைகளின் நோக்கமாகும். இந்த அமைப் புக் கருவிகள் கருப்பையின் நுழைவாயிலை மூடிக்கொண்டு பொறி நுட்ப அரணுக அமைகின்றன. அவை பல்வேறு பொருள்களால் பல்வேறு வகை வடிவங்களிலும் அளவுகளி லும் செய்யப் பெறுகின்றன.

பெண்ணுறையை அணிதல்: ஆண் உறை எந்த நோக்கத் திற்காக ஆண்களால் பயன்படுத்தப் பெறுகின்றதோ அதே நோக்கத்திற்காகவே பெண்கள் பயன்படுத்துவதற்கென்று தாயாரிக்கப் பெற்ற உறையே பெண் உறை" எனப்படும். இந்த உறை மெதுவான இரப்பரால் செய்யப் பெற்றது; விளிம்பைச் சுற்றிலும் வளையக்கூடிய சுருள் கம்பியைக் கொண்டது; அரைக்கோள வடிவினையுடையது: இந்த உறையின் குறுக்களவு இரண்டு அங்குலத்திலிருந்து நான்கு அங்குலம் வரையிலும் வீச்சினைக் கொண்டது. இருபதிற்கு மேற்பட்ட அளவு உறைகள் வழக்கிலுள்ளன. பிறப்புறுப்புச் சோதனை செய்யாது ஒரு பெண்ணுக்கு எந்த அளவு உறை பொருந்தும் என்று சொல்லுவது இயலாது. இடுப்பெலும் புக் கட்டமைப்பில் பெண்ணுக்குப் பென் அதிக மாறுபாடு கள் இருப்பதால் ஒருவருக்குப் பொருந்தும் உறை இன்னுெரு வருக்குப் பொருந்தும் என்று கூறமுடியாது. ஒருவர் கண் ணுக்குப் பொருந்தக்கூடி மூக்குக் கண்ணுடி இன்னொரு வருக்குப் பொருந்தாதல்லவா? அது போலவே இதுவும்.

பெண் உறை பெண்ணின் யோனிக்குழலின் குறுக்கே வைப்பதற்கேற்றவாறு செய் பப்பெற்றுள்ளது கருப்பையின் வாய்க்கும் யோனிக்குழலின் வெளிப்பகுதிக்கும் இடையே இக் கருவியின் இரப்பர் திரைபோல் அமைந்திருப்பதால்

69. Gurr's) Biju-L–Mechanical 70. Quar a las p—Diaphragm

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/289&oldid=598177" இலிருந்து மீள்விக்கப்பட்டது