பக்கம்:இல்லற நெறி.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்பக் கட்டுப்யாடு 露&岛

பொறுத்தது. அவள் விரும்பினால் உறையை உடனே அகற்றி விடலாம்; அல்லது அடுத்த நாள் காலேவரை எடுக்காதும் விட்டுவிடலாம். இணைவிழைச்சிற்குப் பிறகு உடனே உறை யை எடுக்க நேரிட்டால் உறையை எடுப்பதற்கு முன்னரும், அதனை அகற்றிய பின்னரும். 'டுஷ்' செய்து யோனிக் குழலே விந்துப் பாய்மமின்றி நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். இதற்கு இளஞ் சூடான நீர் அல்லது சோப்புக் கலந்த நீர் போதுமானது, புணர்ச்சிக்குப் பின்னர் 8 மணி நேரம் உறை உள்ளேயே இருந்தால் நலம்: அதற்குப் பின்னர் அகற்றினல் கடுஷ்' செய்துகொள்ள வேண்டிய இன்றியமையாமை இல்லே. ஆனால், 24 மணிக்கு மேல் என் சாரணத்தைக் கொண்டும் உறையை அகற்ருமல் வைத்திருத்தல் ஆகாது. உறையை அணிந்து கொள்ளும் முறையினையும் அதனை அகற்றும் முறையனையும் பயிற்சி பெற்ற மருத்துவரை அண்மி நன்கு அறிந்துகொள்ள வேண்டும்.

உறையை அகற்றிய பின்னர் சோப்பு கரைந்த வெது வெதுப்பான நீரைக்கொண்டு உறையினை நன்கு கழுவி உலர வைக்கவேண்டும். பிறகு அதில் மணமுள்ள பவுடரைத் தடவிப் பெட்டிக்குள் பாதுகாப்பாக வைக்க வேண்டும். உறையைப் பயன்படுத்துவதற்கு முன்னர் ஒவ் வொரு தடவையும் அது பழுதுபட்டதா, அன்ரு என்பதைப் பகலவன் ஒளியில் வைத்துக் காணல் வேண்டும். எண்ணெய் வாஸ்லேன் போன்ற களிம்புகள் உறையின் மீது படுதல் கூடாது. தக்க முறையில் உறைபாதுகாக்கப் பெற்ருல் அதனை ஆறு தினங்களிலிருந்து இரண்டாண்டுகள் வரை நன்குப் பயன்படுத்தலாம்.

உறையை அணியக் கற்றுக்கொண்ட ஒரு வாரத்திற் குப் பின்னர் மருத்துவர் மீண்டும் பெண் சரியாக உறையை அணிந்து கொள்ளுகின் ருளா என்பதைச் சரி பார்க்கவேண் டும். அதன் பிறகு ஆண்டுக்கொரு முறை அவளைப் பார்த் தால் போதுமானது. குழந்தைப் பேற்றிற்குப் பிறகோ அல்லது பிறப்புறுப்பில் ஏற்பட்ட அறுவை சிகிச்சைக்குப் பின்னரோ ப்ெண் மீண்டும் ஒரு முறை மருத்துவரின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/291&oldid=598183" இலிருந்து மீள்விக்கப்பட்டது