பக்கம்:இல்லற நெறி.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

இல்லற நெறி


சோதனைக்கு உட்பட்டுப் புதிய உறையை அணிந்துகொள்ள வேண்டும்.

இன்று வழக்கிலுள்ள முறைகளில் இது மிகவும் நம்பத் தகுந்தது; திருப்தியளிக்கக் கூடியது. உறை கருப்பை யின் வாயிலில் ஒரு திரைபோல் அமைந்து விந்துப் பாய்மம் உள்ளே நுழையாமற் பாதுகாப்பு அளிப்பதுடன், ஆண் குறி யும் யோனிக் குழலின் சுவர்களும் நேர்த் தொடர்பு கொண்டு ஊற்றின்பம் குலையாதிருக்கும் வாய்ப்பினேயும் நல்குகின்றது. சரியான அளவுள்ள உறையினை மட்டிலும் தேர்ந்தெடுத்துத் தக்க முறையில் அணிந்து கொண்டு விட் டால் பெண் குறியில் உறை இருப்பதுபற்றிய நினைவுகூட இருவருக்கும் இல்லாது போகும். மேலும், புணர்ச்சிக்கு நீண்ட நேரத்திற்கு முன்னரே இதனை அணிந்து கொள்ளக் கூடுமாதலின் அடுத்து வரும் இணைவிழைச்சின் செயலுக்கு எ வ்வாற்ருனும் இஃது இடைஞ்சலாக இருப்பதில்லை.

கருவாய்க் குல்லாய்களை அணிதல் பெண் உறையைப் பயன்படுத்த விரும்பாதவர்கட்குச் சில சமயம் கருவாய்க் குல்லாய்கள் சிபாரிசு செய்யப்பெறுகின்றன. இந்தக் குல் லாய் அது நேராகக் கருப்பையின் சழுத்திற்கு மேற்புற மாகப் பொருந்துமாறு அமைக்கப் பெறுகின்றது; குல்லாயும் அதன் மீது மிகச் சொகுசாகப் பொருந்துகின்றது; சாதா ரணமாக இக் குல்லாய்கள் இரப்பரினல்தான் செய்யப் பெறுகின்றன. மருத்துவர் சரியான குல்லாயைத் தேர்ந் தெடுத்த பிறகு அதனைச் செருகுவதற்கும் அகற்றுவதற்கும் உரிய வழிகளைப் பெண்ணுக்குக் கற்றுக் கொடுக்கின்ருர், பெண் உறையைப் போலவே தேவையானபோது இதனைப் பெண் செருகிக் கொள்ளுகின்ருள்த மறுநாள் காலைவரை அதனை அப்படியே இருக்கவிட்டும் வைக்கின்ருள்.

அண்மைக் காலத்தில் உலோகம் அல்லது பிளாஸ்டிக்கி ல்ை செய்யப்பெற்ற கருவாய்க் குல்லாய்கள் எங்கனும் பெரு வழக்கிலிருந்து வருகின்றன; இவ்வகைக் குல்லாய்கள் போருக்கு முன்னர் ஐரோப்பாவில் செல்வாக்குடனிருந்தன.

14. கருவாய்க் குல்லாய்கள்-இன்ical caps

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/292&oldid=1285220" இலிருந்து மீள்விக்கப்பட்டது