பக்கம்:இல்லற நெறி.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288

இல்லற நெறி


25

அன்பார்ந்த செந்தில்வேலனுக்கு,

நலன், நலனே யாகுக.

உயிரியல் முறைகள்: கருத்தடை முறைகளில் சில 'உயிரி பல் முறைகள் உள்ளன. அவை யாவும் இன்னும் சோதனை நிலையிலேயே உள்ளன. எதிர்காலத்தில் கருத்தடை முறைகளின் முன்னேற்றம் இத்துறையில்தான் அமையும் என்று மருத்துவ அறிஞர்கள் கருதுகின்றனர் உயிரியல் முறைகளில் ஒன்று "கூடுபருவ முறையாகும். இதனைப் பற்றி முன்னர் விளக்கியுள்ளேன். மற்ருெரு முறை காமச் சுரப்பிகளே வெப்பத்திற்கோ அல்லது புதிர்க் கதிர்களுக் கோ உட்படுத்துவதாகும். இது விந்தணுக்கள் அல்லது முட் டையணு உற்பத்தியைப் பாதிக்கின்றது. எடுத்துக்காட்டாக, ஆணின் விரைகள் வெப்பநிலை மாற்றங்கட்கு மிகவும் உணர் வுடையவை; அவற்றின்மீது வெப்பம் படுமாறு செய்யப் பெற்ருல் விந்தணுக்களின் உற்பத்திச் செயல் மிகவும் குறிப் பிடத்தக்க முறையில் குறைந்து போகின்றது. பிராணிகளைப் பொறுத்தவரை விரைப்பையின்மீது வெந்நீர், சூடான காற்று அல்லது மின்விளக்கு ஆகியன படுமாறு செய்தால் அவற்றிடம் பல வாரங்கள் வரை விந்தணுக்கள் உற்பத்தித் தடைப்படுகின்றது. இம்முறை சோதனைக்காகச் சில மணி தர்களிடம் செய்யப்பெற்றுள்ளது. மேலும், சில ஆராய்ச்சி கட்குப் பிறகு இம்முறை ஒரு தகுதியான கருத்தடைமுறை யாக வளர்தல் கூடும்.

காமச் சுரப்பிகளைப் புதிர்க்கதிர்கட்கு உட்படுத்துதல்: ஆணின் விரைகளேயும் பெண்ணின் சூற்பைகளையும் புதிர்க்

73. உயிரியல் முை pp %éir---Biologicaİ methods 74. இந்நூல்-பக்கம்(253-255) 75; smlo# *brú13 ssir-Sex glands

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/294&oldid=1285221" இலிருந்து மீள்விக்கப்பட்டது