பக்கம்:இல்லற நெறி.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்பக் கட்டுப்பாடு 器莎盈

திரும்பிச் சிறுநீர்த் தாரையில் வந்து சேரும் விந்தேறு குழல் வழியாகச் செல்லுகின்றன என்பதை நீ நன்கு அறிவாய். இக்குழலே வெட்டினுலும் அல்லது கட்டிவிட்டாலும் விந்த ணுக்கள் வெளியேற முடியாது. இந்த அது கவ முறை 'வாசெக்டமி' என்று வழங்கப்பெறுகின்றது. விந்துப் பாய் மத்தின் பெரும்பகுதி விந்துப் பைகளிலிருந்தும் புராஸ்டேட் சுரப்பியிலிருந்தும் வருவதால், இந்த அறுவை முறைக்குப் பிறகும் புணர்ச்சியினுல் வெளிப்படும் விந்துப் பாய்மம் சாதாரணமாக அளவிலும் முறையிலும் வழக்கம்போலவே வெளிப்படும். ஆணுல், விந்துப் பாய்மத்தில் விந்தணுக்கள் இரா இந்த அறுவை மருத்துவ முறையை எளிதாகச் செய்து விடலாம். விரைப் பைகளிலும் தொடைகளினிடையிலும் இந்த விந்தேறு குழல் தோலின் மேற்பரப்பின் அருகிலிருப் பதால் இஃது எளிதாகின்றது. மயக்கமருந்தின்றி உணர்வு நீக்க முறையைக் கையாண்டு இது செய்யப்பெறுகின்றது. இது சேப்பப்பெற்ற பிறகு ஒரு சில நாட்கள் ஒய்வு போது மானது. இந்த முறையில் காமச் சுரப்பிகளுக்கு யாதொரு தீங்கும் நேரிடுவதில்லை.

பெண்களிடம் செய்யப்பெறும் இச் சிகிச்சை இால்பின் ஜெக்டமி' என்று வழங்கப்பெறுகின்றது. இதனையும் கிறிது விளக்குவேன். சூற்பைகளிலிருந்து கருப்பைக்கு வரும் கருக் குழல்களே நீ அறிவாயன்ருே? இக் குழல்களே வெட்டி விட்டால் அல்லது கட்டிவிட்டால், சூற்பைகளிலிருந்து முட்டைவணு கருப்பைக்குள் வருதல் இயலாது; அங்ங்ணமே, கருப்பையிலிருந்து கருக்குழலினுள் பாயும் விந்தனுக்களும் முட்டையை அணுக முடியாது. இத்தகைய அறுவை முறை யைச் செய்வதற்குப் பெண்ணின் அடிவயிற்றைக் கிழித்துத் திறக்கவேண்டும்; பெண்ணும் மருத்துவமனையில் ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் ஒய்வு எடுத்துக்கொள்ளவேண்

79. aurrGarši-lé)–Vasectomy 80. srrest 19ešr Geg#t-tó) -Salpingectomy

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/297&oldid=598195" இலிருந்து மீள்விக்கப்பட்டது