பக்கம்:இல்லற நெறி.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்பக் கட்டுப்பாடு 393

கேடுறும் என்ற நிலை இருக்கும்பொழுதும், குழந்தைகளிருப் பதே விரும்பத்தக்கது அல்ல என்ற நிலை ஏற்படும்பொழுதும் ஆணுே பெண்ளுே இந்த முறையை மேற்கொண்டு மலடாக் கிக்கொள்ள வேண்டும் என்து அவர் கருதுகின்ருர்: எனவே, மருத்துவக் காரணம் பற்றியும், இனமேம்பாட்டியல்' காரணம் பற்றியும், சமூகவியல் காரணம்பற்றியும், அவர் கருத்தடையை ஆதரிக்கின்ருர் என்று தெரிகின்றது . இதை மேலும் சிறிது விளக்குவேன்.

எடுத்துக்காட்டாக ஒரு பெண் ஏற்கனவே இரண்டு முறை "செசேரியன் அறுவை முறையில் குழந்தை பெற்றி ருக்கின்ருள் என்று கொள்வோம்; இனி, மூன்ருவது முறை இம் முறையில் குழந்தை பெறுவதை அவள் விரும்பாள். இந்நிலையில் அவள் குழல்களை வெட்டும் முறையில் மலடாக் கிக் கொள்ளலாம். ஒரு குடும்பத்தில் இந் நிலை ஏற்படுங் கால் ஆணே தன்னே இம்முறைக்கு உட்படுத்திக் கொள்ளு கின்ருவி . சிலசமயம் குழந்தைப்பேறு ஏம்படுங்கால் சிலருக்கு சிறுநீரகங்கள் பாதிக்கப் பெறலாம்; அல்லது முள்ளந்தண் டுக் கொடியில் கோளாறு ஏற்படலாம். இத்தகைய பெண் களும் தம்மை மலடாக்கிக்கொள்வது நல்லது. இது மருத்து வக் காரணம்பற்றி மலடாக்கிக்கொள்வதாகும்:

ஒரு குடும் பத்தில் ஆணுே பெண்ணுே மரபுவழி நோய் களால் பீடிக்கப்பெற்றிருக்கலாம். அவர்கள் தம்முடைய மரபுவழியினருக்கும் இந்நோய் பரவாதிருக்க விரும்பித் தம் மில் யாரோ ஒருவரை மலடாக்கிக்கொள்ள விரும்பலாம்: ஒரு பென்னின் மரபு வழியில் பல தலைமுறைகளில் வலிப்பு நோய்கே மரபு வழியாக இறங்கி வரலாம்; அல்லது பலரிடம் அரைப் பைத்தியம் நேரிட்டு வருவதைக் காணலாம். இந் நிலையில் கணவனே மனைவியோ தம்மில் ஒருவரை மலடாக்

83. இனமேற்பாட்டியல்-Eugenics 84. வலிப்பு நோய்-Epilepsy

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/299&oldid=598199" இலிருந்து மீள்விக்கப்பட்டது