இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஒடி வருகை யிலே-கண்ணம்மா
உள்ளங் குளிரு தடி!
ஆடித் திரிதல் கண்டால்-உன்னைப்போய்
ஆவி தழுவு தடி!
இன்பக் கதைக ளெல்லாம்-உன்னைப்போல்
ஏடுகள் சொல்வ துண்டோ?
அன்பு தருவ திலே-உனேநேர்
ஆகுமோர் தெய்வ முன்டோ?
-பாரதியார் கண்ணம்மா-என் குழந்தை