பக்கம்:இல்லற நெறி.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-5

மக்கட் பேறு மங்கலம் என்ப மனேமாட்சி; மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு.

என்ருர் வள்ளுவப் பெருந்தகை. இவ்வாழ்க்கை நல்வாழ்க் கையாகச் சிறக்க வேண்டுமாயின் கணவனுக்கு நல்ல மனைவி துணைவியாக வாய்க்கவேண்டும். தம்பதிகட்கு உரிய காலதி தில் மக்கட்பேறு ஏற்படவேண்டும். தாய்-தந்தைகுழித்தை இம் மூன்றுஞ் சேர்ந்த ஒன்று சோமாஸ் கந்த மூர்த்தம் என்பது. உலகில் இம் மூன்றும் நிலைபெறல் இயற்கை என்பதை அறிவுறுத்தவே பண்டையோர் கடவுளே இம் மூர்த்தமாகவும் கொண்டு வழிபட்டனர். அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே' என்ற மணி வாசகரின் வாக்கில் தாய் தந்தையரின் அன்பினின்று பிறக் கும் ஆரமுதம்’ குழந்தை என்பது எண்ணி ஒர்தற்பாலது. ஒரு தம்பதிகட்குக் குழந்தைப்பேறு ஏற்படாதிருப்பது இரு பாலாரிடையேயும் உள்ள குறையைப் பொறுத்தது. பெண் ணின் உடற்கூறு முதலியவை சரியாக இருந்து ஆணிட முள்ள மலடு காரணமாகக் குழந்தைப்பேறு ஏற்படாதிருக்க லாம். அங்ங்ணமே, ஆணின் உடற்கூறு முதலியவை செவ்வை யாக இருந்து பெண்ணிடமுள்ள உடற் குறைகளாலும் பிற வற்ருலும் பிள்ளைப்பேறு ஏற்படாதிருக்கலாம், இங்கனம் இரு பாலாரிடையேயுள்ள தடைகளை நீக்கினல் அத் தம்பதி கட்குக் குழந்தைகள் பிறக்கும். இத்தடைகளைப்பற்றிய விளக்கங்கள், அவற்றை நீக்குவதுபற்றிய முறைகள். செயற் கையாக விந்து பாய்ச்சிக் கருவுறச் செய்தல், காலமல்லாக் காலத்தில் குழந்தை பிறந்து விடுதல், அதனைத் தடுத்தல், கருச்சிதைவு செய்தல், அதனுல் ஏற்படும்விளைவுகள் போன்ற செய்திகளும் அவற்ருேடு தொடர்புள்ள பிற தகவல்களும் இப்பகுதியிலுள்ள நான்கு கடிதங்களில் (28-29) ஆராயப் பெறுகின்றன.

1. குறள்-60 --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/303&oldid=598211" இலிருந்து மீள்விக்கப்பட்டது