பக்கம்:இல்லற நெறி.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298

இல்லற நெறி


26

அன்பார்ந்த செந்தில்வேலனுக்கு, நலன், நலன் தெரிவிக்க.

பாரதியாரின் கண்ணன்-என் கு ழந்தை' என்ற பாட லேப் படித்திருப்பாய் என்று நினைக்கின்றேன். தற்காலக் கவிதைகளில் குழந்தைப்பேற்றின் அருமையை அற்புத மாகச் சித்திரிக்கும் பாடல்களை அங்குக் காணலாம். சொல்லு மழலையிலே-கண்ணம்மா துன்பங்கள் தீர்த்திடுவாய் முல்லைச் சிரிப்பாலே-எனது

மூர்க்கக் தவிர்த்திடுவாய்.”

என்ற பாடலைப் போன்ற அற்புதப் பாடல்கள் நம் உள்ளத் தைக் குழைவிக்கின்றன. இங்ங்ணம் பிள்ளைப்பேற்றைப் பற்றி அன்றும் இன்றும் என்றும் மக்கள் பேசி வருவதை எல்லோரும் அறிவர்.

இந்த உலகில் சிலரிடம் குழந்தைச் செல்வம் அதிகமாக இருக்கின்றது; சிலரிடம் இச்செல்வம் அறவே இருப்பதில்லை; சிலருக்கு ஒன்றிரண்டு குழந்தைகளே உள்ளன. குடும்பக் கட்டுப்பாடு போன்ற யாதொரு திட்டமுமின்றி இங்ங்னம் பலரிடம் இருப்பதை நாம் கண் கூடாகக் காணலாம். ஒவ் வொரு மணமக்களும் இத்தகைய பிள்ளைப் பேறு ஏற்படு வதுபற்றிய பல கருத்துகளே அறிந்து கொள்ளுதல் மிகவும் இன்றியமையாதது இனப் பெருக்கத்தைப்பற்றி விளக்குங் கால் கருவுறல், பிரசவம் ஆகியவைபற்றிய கருத்துகளை மட்டிலும் கூறினேன். இக்கடிதத்திலும் இதனை அடுத்து எழுதும் ஒன்றிரண்டு கடிதங்களிலும் பிள்ளைப் பேறு ஏற்படு வதுபற்றிய ஒரு சில ஆழ்ந்த கருத்துகளைக் கூறுவேன்.

2. பாரதியார்-கண்ணன்-என் குழந்துை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/304&oldid=1285225" இலிருந்து மீள்விக்கப்பட்டது