பக்கம்:இல்லற நெறி.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட்பேறு 感姆邬

கருத்தரிப்பிற்குரிய காரணங்கள்: ஒரு தனியாளிடம் கருத்தரிப்பு ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. சில காரணங்கள் மரபுவழிபற்றியவை; சில சூழ்நிலைபற்றி யவை. டார்வின் என்ற உயிரியல் அறிஞர் வீட்டில் வளரும் மிருகங்கள் அதிகமாகக் குட்டிகளை ஈனுவதையும் அதே வகை மிருகங்கள் காட்டில் வாழுங்கால் அதிகமாகக் குட்டி களை ஈனுததையும் எடுத்துக் காட்டியுள்ளார். வீட்டில் வள ரும் மிருகங்கள் அதிகமான உணவு பெறுவதையும் அதை யும் ஒழுங்காகப் பெறுவதையும் இந்நிலைக்கு அவர் காரண மாகக் கூறுகின்ருர். காட்டில் வாழும் துட்ட விலங்குகள் கூட்டில் அடைப்பட்டுக் கிடக்கும்பொழுது அவை: தொடர்ந்து பாலுறவு கொண்டாலும் அதிகமாக இனப் பெருக்கம் செய்ய முடிவதில்லை என்பதை நாம் கண் கூடா கக் காண்கின்ருேம். உணவில் போதுமான விட்டமின்களும், வேறு சில இன்றியமையாத கூறுகளும் இல்லாமை காரண மாகவே சில மிருகங்களிடம் கருத்தரிப்பு குறைவாக இருப்ப தையும் அல்லது அறவே இல்லாது போவதையும் அறிவிய லறிஞர்கள் மெய்ப்பித்துள்ளனர். மனிதர்களிடமு உணவும் உடற் சுகாதாரமும் இனப் பெருக்கத்தில் பெருஞ் செல் வாக்கு பெற்றிருப்பதாகக் கருதப்பெறுகின்றது. குறிப் பாகப் பெண்சளிடம் வயதும் குழந்தைப் பேற்றுக்கு ஒரு முக்கியக் கூருக அமைந்திருப்பதையும், இது குழந்தை பெறும் திறனில் ஒரு முக்கிய செல்வாக்குப் பெறுவதையும் அனுபவத்தில் அறியலாம்.

சாதாரணமாக ஒரு பெண் பூப்பு எய்தியதிவிருந்து சூதக ஒய்வு பெறும்வரை குழந்தைப் பேறு அடைவாள்

3. கருத் afieil-Fertility 4. Lfrffg&gsr—Darwin 5. e ustfigu& siffGff–Biologist 6. Litol-Marurity ws ®Æés Güay-Menopause

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/305&oldid=598215" இலிருந்து மீள்விக்கப்பட்டது