பக்கம்:இல்லற நெறி.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட்பேறு 惑每瑟

கருத்தரிக்கும் செயல் நிற்றலும் அவளிடம் மாறுகின்றது. சாதாரணமாக ஒரு பென் நாற்பத்தைந்தாவது வயதில் கருத்தரிக்கும் திறனை இழக்கின்ருள்; எனினும் ஐம்பது அகவை நிறைந்த ஒரு சிலரும் அறுபது வயது நிரம்பிய பெண்களில் ஒரு சிலரும் கருவுற்றுக் கருவுயிர்த்த செய்தி களை நாம் அறியாமல் இல்லை. இவையெல்லாம் அரிதாக நடைபெறுபவை. ஆயினும், பொதுவாக ஒரு பெண் பதினைந்து வயதிலிருந்து நாற்பத்தைந்து வயதுவரைசுமார் முப்பதாண்டுக் காலம் பிள்ளைப் பேற்றினை அடை கின்ருள் என்பதே நாம் அறிய வேண்டிய செய்தியாகும்.

அமெரிக்க நாட்டில் இருபதிற்கும் முப்பத்து ஒன்பதிற் கும் இடையிலுள்ள வயதுப் பெண்களுக்குப் பிறக்கும் குழவிகள் 87 சத விகிதம் என்றும், ஏனைய 13 சத விகிதக் குழவிசள் இருபதிற்குக் கீழும் முப்பத்தொன்பதற்கு மேலும் வயது உள்ள பெண்களுக்குப் பிறக்கின்றன என்றும் புள்ளி விவரங்களால் அறிகின்ருேம். இத்தகைய புள்ளி விவர ஆராய்ச்சி நம் நாட்டிற்கும் வேண்டப் பெறுவதாகும். இன்று பொதுவாகப் பூப்பெய்தியதிலிருந்து தொடங்கும் குழந்தை பெறும் திறன் இருபதிலிருந்து முப்பது வயது வரை உள்ள பெண்களிடமே படிப்படியாக அதிகரித்து உச்ச நிலையை அடைகின்றது என்றும், அதன் பின்னர் அத் திறன் முதலில் மெதுவாகவும் பின்னர் விரைவாகவும் குறை கின்றது என்றும் எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பெற்ற செய்தி என்பதை அநுபவத்தில் நன்கு காணலாம். சூதக ஒய்வு தொடங்கியதும் இத்திறனும் விரைவாகக் குறைந்து இறுதியில் அறவே இல்லாது போகின்றது. ஒரு சிலர் பிள்ளைப்பேறே இல்லாதிருந்து சூதக ஒய்வு அடையும் காலத்தில் கருவுறுகின்றனர். இங்ங்னம் அத்திபூத்த மாதிரி ஒரு சிலர், கருவுறுவதற்குக் காரணம் இன்னும் மருத்துவ உலகம் கண்டறியாத புதிராகவே உள்ளது.

சூதக ஒய்வு நடைபெறும் முறைகள்: இவ்விடத்தில் சூதக ஒய்வு நடைபெறும் முறைகளைப் பற்றிச் சிறிது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/307&oldid=598219" இலிருந்து மீள்விக்கப்பட்டது