பக்கம்:இல்லற நெறி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணப்பொருத்தம் 25

மிருந்து எதிர்ப்பார்ப்பதில்லை; தம்மை அவன் ஆதரிப்பான் என்றும் கருதுவதில்லை. குடும்பத்தை நடத்தும் திறன், பொருளீட்டுத்திறன், கல்வியறிவு போன்ற ஒரு சில இன்றி யமையாத கூறுகளே இன்று மணமகனிடம் அமைய வேண்டியவை என்று பெரும்பாலோர் கருதுகின்றனர். இன்றைய சமுதாய நிலையில் சில சமூகங்களில் கணவனும் மனைவியுமே பொருளீட்டுந் திறனுடையவர்களாக இருத்தல் விரும்பப்பெறுகின்றது. ஆயினும், ஆண் மகனே குடும் பத்தை நிர்வகிக்கும் பொறுப்புடையவனுக இருத்தல் வேண்டும். அத்தகைய பொருளாதார நிலை ஏற்பட்ட-பிறகு தான் அவனுக்குத் திருமணம் புரிந்து கொள்ளும் தகுதி வரு கின்றது என்பதே பெரும்பான்மையோரின் கருத்தாக இருந்து வருகின்றது. இன்று திருமணம்பற்றிச் செய்தித் தாள்களில் வரும் விளம்பரங்களை நோக்கின் இவ்வுண்மை புலனுகாமற் போகாது. "வினையே ஆடவர்க்குயிர் என்ற குறுந்தொகை' அடியையும், உத்தியோகம் புருஷ லட்சணம்’ என்ற மக்களின் பேச்சு வழக்குத் தொடரையும் எண்ணிப் பார்ப்பாயாக. தேன் கூட்டின் சோம்பேறி ஈயின் வாழ்க்கையை எந்த ஆடவனும் மேற்கொள்ள லாகாது என்பதே என் கருத்து. எனவே, ஆடவனின் பொருளாதார நிலை முக்கியமான திருமணப் பொருத்த மாகின்றது என்பது நோக்கத்தக்கது.

மேற்கூறியவற்றிலிருந்து ஆடவனுக்குப் பொருளாதார நிலை-அவனுக்குப் பொருளிட்டுந்திறன் ஏற்பட்ட பிறகு தான் நம்பியும் நங்கையும் மணமக்களாக வேண்டுமா என்று நீ கேட்கலாம். இல்லை; அப்படி ஏற்படவேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. குடும்பத்தைச் சரியாக ஆட்சிசெய்யும் பொறுப்பு ஆடவனுக்கு வரும்வரையிலும் திருமணத்தைத் தள்ளிப் போடுதல் அறிவுடைமை ஆகாது என்பது என் கருத்து, பொருளாதாரப் பாதுகாப்பு ஏற்படும் பல்லாண்டு

12. குறுந்-135,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/31&oldid=598225" இலிருந்து மீள்விக்கப்பட்டது