பக்கம்:இல்லற நெறி.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட்பேறு 惑粤荔

யாதொரு தடையுமின்றி இருத்தல் வேண்டும். மூன்ருவதாக முட்டையும் விந்தனுக்களும் சந்திக்கும் இடமாகிய கருக் குழலில் நல்ல முட்டை இருக்க வேண்டும் மேலும், கருப் பையின் ஆணேச்சவ்வும் கா வுற்ற முட்டை தன்னைப் பதித் துக்கொண்டு வளர்வதற்கேற்றவாறு பக்குவப் பெற்றிருத் தல் வேண்டும். இந்த முக்கியமான நிலைமைகள் ஆணிடமோ அன்றிப் பெண்ணிடமோ ஏற்படுவதில் ஏதாவது தடையோ குறையோ இருக்குமாயின் கருத்தரிப்பதில் தடை ஏற்படு கின்றது.

இருபாலாருடைய குறை: மேற்கூறியவற்ருல் குழந்தைப் பேறு ஏற்படாதிருத்தலுக்கு இருபாலாரிடமும் குறையோ தடையே இருத்தல்கூடும் என்பது பெற்ப்படுகின்றதன்ருே? உண்மை அங்ங்ணமிருக்க மக்கட்பேறு இல்லாத ஆண்மகன் தன்னுடைய செல்வக் செருக்கினலோ அல்லது பன்னெடுங் காலமாக சமூகத்தில் தவருக வழங்கிவரும் வழக்காற்றி ஞலோ முதல் மனைவியை ஒதுக்கிவைத்துவிட்டு இரண்டாவ தாக இன்ைெருத்தியை மணப்புரிந்து கொள்ளுதல் எவ்வ எவு கொடுமை என்பதை நீ உணர்வாயாக. இரண்டாவது மணம் புரிந்து கொண்ட பின்னர் அவர்கட்கு மக்கப்பேறு ஏற்படுகின்றதே என்று இரண்டாவது மண முறையை ஆத சிக்கும் சிலர் வாதிக்கலாம். மக்கட்பேறு இல்லாமலும் போகின்றதே என்று அதற்கு நாம் மறுமாற்றம் உரைத்து அவர்கள் வாயை அடக்குதல் முடியும். மேலும் பெண்ணிற்கும் மறுமணம் புரிந்துகொள்ள உரிமையிருப்பின், அவளும் இரண்டாவது கணவன்மூலம் குழந்தைகளைப்பெறு வதற்கு வாய்ப்பு இருக்குமல்லவா? இங்ங்ணம் உரிமையுள்ள இல சமூகங்களில் இத்தகைய வாய்ப்பினைப் பெறும் பெண் குழந்தைப்பேறு அடைவதை நாம் காண்கின்ருேமன்ருே என்றும் வாதிக்கலாம். எனவே, கருத்தரித்தல் என்பது முழு மையான பண்பு அன்று. ஒரு பெண்ணுே ஆணுே முற்றி லும் கருத்தரிக்கும் இயல்புடையவர்கள் என்ருே அல்லது

13. முழுமையான assal-Absolute Liality இ-20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/311&oldid=598229" இலிருந்து மீள்விக்கப்பட்டது