பக்கம்:இல்லற நெறி.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312

இல்லற நெறி


வழங்குவர். விரைகள் விந்தனுக்களே உற்பத்தி செய்யாத பொழுதும் விந்தேறும் தாம்புகளில் ஏதாவது தடைகளி ருத்து விந்தணுக்கள் செல்வதைத் தடுத்தாலும் இந்நிலை ஏற்படுகின்றது. படம்-48 ஒர் ஆணிடம் விந்தணுக்கள் உற் பத்தியில்லாமையையும் வெள்ளை நோயின் காரணமாக எபிடிடை மிளில் ஏற்பட்ட 'விக்கத்தால்: அது மூடிக் கொண்ட நிலையையும் காட்டுகின்றது. இப்படத்தை மேற் கூறிய இரண்டு குறைகளும் இல்லா நிலையை விளக்கும் படம் 47.டன் ஒப்பிட்டுத் தெளிவு பெறுக சிலரிடம் பிறவியிலேயே ஏற்பட்ட அமைப்பாலும், அடிபட்ட காயத் தாலும், வேறு தொற்று நோய்கள் பாதித்தமையாலும் விந்து பாயும் தாம்புகளில் அடைப்புகள் ஏற்படலாம்.

விக்தணுக்கள் உற்பத்தி இல்லாமைக் குக் காரணங்கள்: ஒர் ஆணிடம் விந்தனுக்கள் உற்பத்தி இல்லாமைக்குப் பல காரணங்கள் உள்ளன. பிறவியிலேயே சிலரிடம் விரைகள் இறங்கா நிலையிலிருத்தல், அடித்தலைச் சுரப்பிகள் அல்லது புரிசைச் சுரப்பிகளில் நேரிடும் தொந்தரவுகளால் விரைகள் பாதிக்கப்பெறல், உணவிலுள்ள குறைகள், விரைகளின் மேல் புதிர்க்கதிர்கள் படுதல், பிறப்புறுப்புக்களில் ஏற்படும் தொற்று நோய்கள், பொதுவாக ஒழுங்கு முறையாக வரும் நோய்கள் - ஆகியவற்றுள் ஏதாவ தொன்று விந்தனுக்களின் உற்பத்தியைக் கடுமையாகப் பாதிக்கின்றது. பொதுவாக வரும் தொற்றுநோய்களுள் புட்டாலம்மை' என்ற நோய் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கது. இந்நோய் விரகறியும் பருவத்தில் அல்லது அதற்குப் பிறகு ஏற்பட்டால், அது சில சமயம் சிக்கலாகி ஆண் விரைகளில் வீக்கத்தை உண்டுபண்ணுகின்றது. இந்த வீக்கம் விரைகளில் அவை செயற்படாநிலையையோ, அல்லது வித்தணுக்கள் உற்பத்தித் தடையையோ உண்டாக்க

21. cásh —-ínflammation 22. Lju: l-mewth soun –Mumps 23, Gausful—ir flāb-Atrophy

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/318&oldid=1285232" இலிருந்து மீள்விக்கப்பட்டது