பக்கம்:இல்லற நெறி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

இல்லற நெறி


கட்கு முன்னரே இளைஞர்களின் உடல்நிலை திருமணத்திற்கு ஏற்ற முற்றிய நிலையை அடைந்து விடுகின்றது; இந்த இடை வெளி சதா விரிந்துகொண்டே போகின்றது: ஆகவே, திருப்தியான பொருளாதார நிலை ஏற்படும் வரையிலும் திருமணத்தை ஒத்திப் போடுதல் அறிவுடைமையன்று. கணவனுக்குச் சரியான பொருளாதார நிலை ஏற்படும் வரை மனைவியும் குடும்பநிர்வாகத்திற்குச் சிறிது வருவாய் நல்குதல் சிறிது பொருத்தமே. இதன் பொருட்டே இன்றும் சிலர்ஏன்? பெரும்பாலோர்-மணமகனுக்குச் சிறிதாவது சொத்து அல்லது தொழில் இருக்க வேண்டும் என்றும், மணமகளுக்கு அவள் பெற்ருேர் சில தங்கநகைகள் பூட்டியனுப்பவேண்டும் என்றும் வற்புறுத்துகின்றனர். இந்தப் பொருளாதார நுட்பம்தான் நாளடைவில் அறிவின்மையாலும் பேராசை யாலும் வரதட்சிணைப் பேயாக மாறியது. இப்பேய்தான் இன்று பாராளுமன்றத்தினரால் அன்பளிப்புத் தேவதை யாக மாற்றப்பெற்றுள்ளது! மக்கள் மனம் மாரு தவரை எந்தச் சட்டத்தாலும் பயன் இல்லை என்பதற்கு இஃது ஒர் எடுத்துக்காட்டாகும். பாராளுமன்றத்திலுள்ளவர்களும் சாதாரண மக்கள்தானே? கல்வியறிவு இல்லாத மக்களாட்சி யில் அறிஞர்கட்கு இடம் ஏது?

இன்னும் சிலர் திருமண வயது வந்தவுடன் திருமணம் புரிந்துகொண்டாலும், மக்கட்பேறு ஏற்படுவதைத் தள்ளிப் போட்டுக் கொள்ளலாம் என்று கருதுகின்றனர். பெரும்பா லான இளந்தம்பதிகளின் முன் நிற்பது இந்தப் பிரச்சினையே. நம் நாட்டில் இளைஞர்கள் இதை அதிகமாகக் கருதுவதில்லை; மேனுட்டில் இஃது ஒரு முக்கிய பிரச்சினையாக இருந்து வரு கின்றது. திருமணத்திற்குப் பிறகு குழந்தைப் பிறப்பைத் தள்ளிப் போடவேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படை யிலேயே பலர் அங்குத் திருமணம் புரிந்துகொள்ளுகின்றனர். கருத்தடையற்றிய சிறந்த முறைகளின் விவரங்கள் யாவும் அங்கு மணமக்கள் அறிந்து கொள்ளுகின்றனர். இதைக் கருத்தில் கொண்டும், மக்கள் தொகையின் பெருக்கத்தைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/32&oldid=1285091" இலிருந்து மீள்விக்கப்பட்டது