பக்கம்:இல்லற நெறி.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314

இல்லற நெறி


சோதனையினுல் விந்தனுக்கள் நன்னிலையிலிருப்பது தெரிந் தது. இவருடைய விரைகளைச் சுற்றிச் சிறிது தடித்த நிலை காணப்பெற்றது. அறுவை சிகிச்சை முறையால் துாம்பின் அடைப்பு சரிப்படுத்தப்பெற்றது. இச்சிகிச்சை செய்யப் பெற்ற ஒரு சில மாதங்களில் அவருடைய மனைவி கருவுற்று ஒரு நல்ல குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

அலாஸ் பெர்மியாவுக்குக் காரணங்கள் : இன்னுெரு முக்கிய செய்தியையும் ஈண்டு நீ அறிதற்பாலது. அஸ-ஸ் டெர்மியா’ என்ற நோய் குழந்தைப்பேறில்லாத் தம்பதி களில் நூற்றுக்கு எட்டு அல்லது பத்து கணவன்மார் களிடமே காணப்பெறுகின்றது. பெரும்பாலோரிடம் கருத் தரியாத நிலை அஸ்சஸ்பெர்மியா’ என்ற குறையினுல் அன்று. ஆல்ை, அது வித்தனுக்களின் எண்ணிக்கையில் குறை, அவற்றின் உயிர்ச் சக்தியில் குறை, அவற்றின் தன்மையில் குறை ஆகிய குறைகளினலேயே இந்நிலை காணப்பெறு கின்றது. காப்பிகளில் தொந்தரவுகள், ஊட்டக் குலைவுகள், விட்டமின் குறைகள், பொதுவான அல்லது குறிப்பிட்ட இடங்களில் தொற்றுக்கள் ஆகிய பல்வேறு காரணங்களால் இக்குறைகள் நேரிடலாம். சுருங்கக் கூறின், உடலியல் முறையில் உடல் செயற்படுவதற்குரிய எந்த நிலை குறைந் தாலும் இவ்விளைவு ஏற்படலாம். ஒர் ஆணிடம் ஏற்படும் விந்தணுக்களின் உற்பத்தி மிகச்சிக்கலான, நுட்பமான செயலாகும்; இஃது உடலில் ஏற்படும் குலைவுகளால் உடனே பாதிக்கப்பெறுகின்றது. உடல் நலத்துடனுள்ள ஆண் களிடம்கூட குறையுள்ள விந்துப் பாய்மம் உள்ளது; மிக விரிந்த நிலையில் மேற்கொள்ளப்பெறும் ஆராய்ச்சிலும் இக் குறையின் காாணம் தெளிவாக அறியப்பெறவில்லை விந் தணுக்களின் குறைவிற்கோ அல்லது அவற்றின் உற்பத்தி யின்மைக்கும் மலட்டுத் தன்மைக்குமோ கொண்டு செலுத் தக்கூடிய பல கூறுகள் இன்னும் மருத்துவ உலகம் அறியாப் புதிர்களாகவே உள்ளன.

விந்துக் குறை நீக்கம் : விந்துவில் உள்ள குறைகளையும் ஒரளவு நீக்கலாம். ஆல்ை, அது குறைகளின் காரணத்தைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/320&oldid=1285233" இலிருந்து மீள்விக்கப்பட்டது