பக்கம்:இல்லற நெறி.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316

இல்லற நெறி


உள்ளது. ஆணின் விந்தனுக்களை ஆராய்வதைப்போல் பெண்ணின் முட்டைகளின் உயிர்ச் சக்தியையோ அல்லது அவற்றின் தன்மையையோ ஆராய்வதற்கு யாகிதாரு திட்டமான முறையும் இல்லை: நேரடியாக ஆராய்வதற்கு முட்டைகள் நமக்கக் கிட்டுவதில்லை; பெண்ணின் பொது நிலையையும் அவளுடைய இனப்பெருக்க மண்டலத்தையும் ஆராய்ந்து நேரல் முறையில்தான் முட்டைகளின் நிலைமை யை அறுதியிடல் வேண்டும்.

ஒரு பெண்ணிடம் மாதந்தோறும் ஒரு முட்டை முதிர்ச்சியடைந்து வெளியிடப்பெறுகின்றது என்பதை நீ நன்கு அறிவாய். எனினும், சில சமயம் முட்டையணு முதிர்ச்சியடைவதில் தவறலாம்; அல்லது அப்படி முதிர்ச்சி யடைந்தாலும் அது சூற்பையிலிருந்து கழன்று விடுபடுவ தில்லே, ஒரு பெண்ணிடம் முட்டை எப்பொழுது முதிர்கின் றது. முதிர்ந்த முட்டை எப்பொழுது வெளி வரு கின்றது என்பதைத் தீர்மானிக்கவும் பல முறைகள் உள்ளன: அவற்றையும் உனக்கு விளக்குவேன்.

முட்டை முதிரும் காலத்தை அறுதியிடல் : கருத்தரியாப் பருவத்தைப் பற்றிக் கூறும்பொழுது நா.ோறும் வெப்ப நிலை:ைப் பதிந்து காணும் முறையின் சிறப்பைக் குறிப்பிட் டேன் அல்லவா? அதனை ஈண்டு நினைவு கூர்வாயாக. இவ் வாறு பல மாதங்கள் அன்ருட வெப்ப நிலைகளை அளந்து குறிக்கும் விளக்கப்படத்திலிருந்து' ஒரு பெண்ணிடம் முட்டை பக்குவமடைகின்றதா, அஃது எப்பொழுது நடை பெறுகின்றது என்பது போன்ற செய்திகளைக் கிட்டத் தட்டச் சரியாக அறுதியிடலாம். குழந்தைப் பேறில்லாத் தம்பதிகள் இந்தப் பதிவேட்டினேக் கொண்டு தம்முடைய உச்சநிலைக் கருத்தரி நாட்களை அறுதியிட்டுக்கொள்ளலாம்.

26. 5453 offurio tugjailb–Safe period 26. விளக்கப்படம்-Chart 27, L33s,16–Record

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/322&oldid=1285234" இலிருந்து மீள்விக்கப்பட்டது