பக்கம்:இல்லற நெறி.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318

இல்லற நெறி


இரண்டு மணி நேரம் கழித்து அந்த எலியைக் கொன்று அதன் சூ ற்பைகள் சோதிக்கப் பெறுகின்றன. முட்டை பக்குவமடைந்திருந்தால் பெண்ணின் சிறு நீரில் காணப் பெறும் ஒருசில ஹார்மோன்கள் எலியின் குற்பைகளில் ஒரு வித நெருக்கத்தை விளைவித்து அவற்றை இளஞ் சிவப்பு' நிறமாகவோ, அல்லது செந்நிறமாகவோ தோற்றமளிக்கச் செய்கின்றன. முட்டை பக்குவமடைந்திராவிடில் சூற்பை கள் வழக்கம்போல் மங்கலான நிறத்தைக் கொண்டவை யாகவே உள்ளன.

பெண்ணின் கருப்பையின் அணைச் சவ்வினின்றும் ஒரு சிறு துண்டு இழையத்தை எடுத்து அதனை ஒரு துண் பெருக்கி யால் சோதித்து முட்டை பக்குவமடைதல் அறுதியிடப் பெறுகின்றது. இம்முறை எண்டோமெட்ரிய பயோப்ஸி : என வழங்கப்பெறும் சாதாரணமாக இச்சோதனை மாத விடாய் ஏற்படுவதற்குச் சற்று முன்னர், அல்லது அஃது ஏற்பட்ட முதல் நாள், செய்யப்பெறுகின்றது. முட்டை பக்குவமடைதல் நடைபெற்றதும் கருவுற்ற முட்டையை ஏற்பதற்காகக் கருப்பையின் அனைச் சவ்வு பிரத்தியேக மான மாற்றங்களே அடைகின்றது. இந்த மாற்றங்கள் நடை பெறவில்லே என்பது தெரிந்தால், அந்த மாதத்தில் சூற்பையில் முட்டை பக்குவமடையவில்லை என்பதற்கு அது உய்த்தறியக்கூடிய சான்ருகும்.

இவ்விடத்தில் இன்னுெரு செய்தியையும் நீ நினைவு கூர் தல் வேண்டும். முட்டை பக்குவமடையாமலேயே மாத விடாய் நிகழ்தல் கூடும் என்று ஏற்கெனவே கூறியுள்ளேன். இவ்வித மாதவிடாய் வட்டங்கள் முட்டை பக்குவமடையா வட்டங்கள்' என்று வழங்கப்பெறும். அவை குமரப் பரு

ംബ

s3. Gossi-Conges ion sa: இளஞ்சிவப்பு-Pink 35. எண்டோமெட்ரிய பயோப்ளி-Endometrial

biopsy 35. முட்டை பக்குவமடையா வட்டங்கள்-'Amovulatory eycles’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/324&oldid=1285235" இலிருந்து மீள்விக்கப்பட்டது