பக்கம்:இல்லற நெறி.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320

இல்லற நெறி


அனிச்சை வலிப்பு: ஏற்பட்டு ஆண் குறியை நுழைப்பது சாத்தியப்படுவதே இல்லை. மருத்துவமனையில் சிகிச்சையின் மூலம் இத்தடை நீக்கப்பெற்றதும் ஆண் குறியை நுழைப் பது எளிதாயிற்று இரண்டு திங்களில் அவருடைய மனைவி யும் கருவுற்ருள்.

கருப்பையின் வாயிலுள்ள தடையும் யோனிக் குழலில் செலுத்தப்பெற்ற விந்தணுக்கள் கருப்பையினுள் நுழை வதற்கு இடையூறுக இருத்தல் கூடும். இத்திறப்பு யாதாவது ஒரு தொற்றின் காரணமாகத் தடித்த உறுதியான சுரப்பி நீரால் நிரம்பியிருந்தால் அது விந்தணுக்கள் செல் வதற்கு ஓர் அரணுக அமைந்து விடுகின்றது. விந்தணுக்கள் இந்தத் தடித்த சளியில் சிக்கிக்கொண்டு மேல் நோக்கி நகர முடிவ தில்லை. இந்தத் தொற்று நீக்கப்பெற்ருல் பெண் கருத்தரித் தல் கூடும். இத்தகைய குறையினையுடைய பல பெண்கள் பல ஆண்டுகள் கருத்தரியாமலுள்ளனர் என்பதற்கும் இத்தடை நீக்கப்பெற்றதும் கருத்தரிப்பு பெரும்பாலும் உடனே நிகழ்ந்து விடுகின்றது என்பதற்கும் மருத்துவமனைச் சான்றுகள் உள்ளன. கருவாயிலின் அடைப்பிற்குத் தொற் றினத் தவிர வேறு நிலைமைகளும் உள்ளன. ஆகவே, ஒவ் வொரு பெண்ணையும் தனித்தனியாக நன்கு சோதித்து உண்மை நிலையை அறிய வேண்டும்.

கருப்பையினுள் விந்தனுக்கள் நுழைந்தனவா என்பதை : இணை விழைச் சுக்குப்பின் சோதனை' என்ற சோதனை மூலம் அறுதியிடலாம். இச்சோதனை இன்று ஹ-ஹ்னர் சோதனை என்று வழங்கப் பெறுகின்றது. கணவனுடன் இணைவிழைச்சு புரிந்த பல மணி நேரங்கழித்து அவளுடைய யோனிக்குழலிலிருந்தும் கருப்பையின் வாயிலிருந்தும் வரும் சுரப்பு நீர்களில் ஒரு பகுதியை அகற்றி நுண் பெருக்கியின்

38. 9 of $os Gusfl.jL-Reflex spasm 39. இணைவிழைச்சுக்குப்பின் சோதனை-Post-coital test 49. guo-opioif G+frao-Huhner test,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/326&oldid=1285236" இலிருந்து மீள்விக்கப்பட்டது