பக்கம்:இல்லற நெறி.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட்பேறு 岛器翼

மூலம் ஆராயப்பெறுகின்றது: இச்சோதனை மூலம் வித் தணுக்களின் இருப்பும் அவற்றின் உயிர்ச் சக்தியும் அறுதி யிடப்பெறுகின்றன. இது மாதவிடாய் வட்டத்தின் நடுப் பகுதியில்-கருத்தரி நிலை உச்ச நிலையில் இருக்கும் நாளன்று -மேற்கொள்ளப் பெறுகின்றது. இச்சோதனை மூலம் விந் தணுக்கள் கருப்பையின் வாயிலில் நுழைந்தனவா என்பதை யும், அவை யோனிக் குழலிலும் கருப்பையிலும் எவ்வளவு நேரம் இயக்க நிலையிலுள்ளன என்பதையும் அறுதியிடலாம்

கருக்குழல்களினுள் விந்தணுக்கள் நுழைந்தனவா என் பதை அறுதியிடுவதற்கு யாதொரு சோதனையும்கண்டறியப் பெறவில்லை. அடிவயிற்றைக் கிழிக்காமல் நேர்முறையில் குழல்களைச் சோதிப்பதற்கும், அவற்றினுள் கருவிகளே நுழைத்து ஆராய்வதற்கும் யாதொரு வழியும் இல்லை. எனி னும், சில பிரத்தியேகமான முறைகளால் குழல்கள் திறந் துள்ளனவா, அன்றி மூடப்பெற்றுள்ளனவா என்பதை அறுதி யிட முடிகின்றது. இச்சோதனை வருமாறு: கரியமில வாயு ஒரு குறிப்பிட்ட அளவு அமுக்க நிலையில் கருப்பையினுள் செலுத்தப்பெறுகின்றது. கருப்பையின் அறை நிரம்பியதும் வாயு, குழல்களின் வழியாகப் போக முயல்கின்றது. குழல் கள் திறந்த நிலையிலிருப்பின், வாயு அவற்றைக் கடந்து அடி வயிற்றுக்கு வருகின்றது. குழல்கள் மூடப்பெற்றிருந்தால் வாயு தடையேற்பட்டிருக்கும் இடத்திற்கு அப்பால் கடந்து செல்ல முடிவதில்லை. உள்ளே செலுத்தப் பெறுவதற் கேற்ற வாயுவின் அமுக்க நிலையிலிருந்தும் , அடிவயிற்றில் துடிப்பறி கருவியை' வைத்துக் கேட்கும்பொழுது வாயு வின் குமிழிடும் ஒலிகளிலிருந்தும், பெண் உட்காரும் பொழுது வாயு மேலெழுந்து விதானத்தில் எரிச்சலே விளைவிப் பதால் அவளுக்கேற்படும் புயவலியிலிருந்தும், வாயுவைச் செலுத்திய பிறகு மேற்கொள்ளப் பெறும் புதிர்க்கதிர்ச் சோதனையாலும் கருக்குழல்கள் திறந்த நிலையிலுள்ளனவா என்பதை அறியலாம். வாயுவைச் செலுத்துவதற்குத் தேவைப்படும் பல்வேறு அமுக்க நிலைகளிலிருந்து குழல்களி

41: gųDLA *Geo-Stethoscope இ-21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/327&oldid=598263" இலிருந்து மீள்விக்கப்பட்டது