பக்கம்:இல்லற நெறி.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட்பேறு $ 85

இந்நிலையில் அது கருப்பையிலுள்ள வழியை அடிைத்து விந்தணுக்கள் கருக்குழலை நோக்கிச் செல்வதைத் தடுக் கின்றது. மருத்துவர் இந்தத் தவருன நிலையை எளிதில் சரிப் படுத்திக் கருப்பையை தன்னிலையில் பெயர்த்து வைத்துத் தடையை நீக்கிவிடுவார்:

கருத்தரியா நிலையிலுள்ள சிலரிடம் கருவுறல் ஏற்பட் டாலும் கருவுற்ற முட்டை சரியாகக் கருப்பையில் பதித்துக் கொள்வதில் தவறுகின்றது. இதனுலும் பெண்களிடம் கருப் பம் ஏற்படாமற் போகின்றது; கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமற் போய்விடுகின்றது! ஒரு சில ஹார்மோன்களின் குறைவினலோ, அல்லது கருப்பையின் அணேச்சவ்வு தன்னைச் சரியாக ஆயத்தம் செய்துகொள்வதற்குத் தடையாகவுள்ள பிற காரணங்களாலோ இவ்வாறு தவறுதல் நேரிடலாம். இவற்றைக் குணப்படுத்துவதற்குத் தற்காலத்தில் பல நல்ல முறைகளும் மருந்துகளும் கண்டறியப்பெற்றுள்ளன.

பல செய்திகளை விரிவாக விளக்கியதால் இக் கடிதம் சிறிது நீண்டது. செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய் யும் முறைகளையும் அவற்ருேடு தொடர்புள்ள வேறு சில செய்திகளையும் அடுத்து எழுதுவேன்.

அன்புள்ள, திருவேங்கடத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/331&oldid=598273" இலிருந்து மீள்விக்கப்பட்டது