பக்கம்:இல்லற நெறி.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட்பேறு 327

நவீன முறைகளில் மக்கட்பேறு; இனி, மக்கட்பேறில்லாதி தம்பதிகட்கு எவ்வாறு நவீனமுறையில் அப்பேற்றினை அளிக் கலாம் என்பதை விளக்குவேன். இன்று இத்தகைய தம்பதி களிடமுள்ள குறைகளை அறிந்து சிகிச்சை செய்வதில் 80 சத விகிதம் வெற்றியளித்துள்ளது; சோதனையால் கண்டறி யப்பெற்ற குறைகளைப் பொறுத்தே சிகிச்சை மேற்கொள் ளப்பெற்று வருகின்றது. உடலியல்பற்றிய குறைகள் பல் வேறு மருத்துவ- அல்லது அறுவைமுறைகள் மூலம்நிவர்த்தி செய்யப்பெறுகின்றன. விந்தணுக்கள் அல்லது முட் டையணு உற்பத்தியில் குறையிருப்போர் பிரத்தியேகமான ஹார்மோன்களும் விட்டமின்களும் அளிக்கப்பெறுகின்ற னர். பொதுவாக, தம்பதிகளின் உடல்-உள்ளக்கிளர்ச்சிநலம் பற்றி அதிகக் கவனம் எடுத்துக்கொள்ளப்பெறுகின் றது. ஒரு சிலரிடம் செயற்கையாக விந்து பாய்ச்சல் முறை யும் மேற்கொள்ளப்பெறுகின்றது.

செயற்கை முறையில் விக் து பாய்ச்சுதல்: ஆணின் விந்துப் பாய்மத்தை எடுத்து பொறிநுட்பமுறையில் பெண்ணின் பிறப்புறுப்புப் பாதையில் செலுத்தி ஒரு பெண்ணேக் கருவுற செய்தலே செயற்கையாக விந்துப் பாய்ச்சும் முறையாகும். இதில் இயற்கையில் பெறும் சரக்கு செயற்கை முறையில் குத்திப் புகுத்தப்பெறுகின்றது. விந்தணுக்கள் ஓர் ஆணினு டையவை; முட்டையணுவும் பெண்ணினுடையது என்பது வெளிப்படை. இவை இரண்டும் பெண்ணின் கருக்குழலில் சந்திக்கும்பொழுதுதான்-ஆய்வகச் சோதனைக் குழலில் அல்ல!-கருத்தரிப்பு ஏற்படுகின்றது. இம்முறை நீண்டகால மாகப் பிராணிகளிடம் மேற்கொள்ளப்பெற்று வருகின்றது: கி பி. 1784இல் இத்தாலிய அறிவியலறிஞர் ஸ்பல்லான் ஸ்ானி என்பார் பெண் நாயென்றினை இவ்வாறு கருவுறச் செய்தார் என்று . அறிகின்ருேம். அவர் அதே வகையைச் சேர்ந்த ஆண் நாயின் விந்துப் பாய்மத்தை எடுத்து அதனை ஒரு பீச்சாங்குழல்மூலம் பெண் நாயின் யோனிக்குழலினுள்

50; oudèson &omiroft–Spailanzani

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/333&oldid=598276" இலிருந்து மீள்விக்கப்பட்டது