பக்கம்:இல்லற நெறி.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328

இல்லற நெறி


ளும் கருப்பையினுள்ளும் குத்திப் புகுத்தினர்; அறுபத்தி ாண்டு நாட்கள் கழிந்ததும் பெண் நாய் மூன்று குட்டிகளை ஈன்றன. அவை:நிறத்திலும் வடிவத்திலும் தாயைப்போலவும் தந்தையைப்போலவும் இருந்தன. அன்றிருந்து இம்முறை பல்வேறுவகைப் பிராணிகளிடம் மேற்கொள்ளப்பெறு கின்றது. சுண்டெலிகள், ஒருவகை, முயல்கள், நாய்கள், பசுக்கள், குதிரைகள்-இப்பொழுது பெண்கள்- ஆகியவை களிடம் எண்ணற்ற தடவைகள் இம்முறை வெற்றியுடன் கையாளப் பெற்றுள்ளது.

மேற்கூறப்பெற்ற முறை வெறும் சோதனை அளவில் தான் மேற்கொள்ளப்பெறுகின்றது என்று கருதுதல் வேண்டா. உயர்த்தவகைப் பிராணிகளைப் பிறப்பிப்பதற் காகவே இன்று பெருவழக்காக இம்முறை பயன்படுகின்றது. கிட்டத்தட்ட அறுநூறு யாண்டுகட்கு முன்னர் அரேபியக் குதிரைகளே வளர்ப்போர் இம்முறையைப் பயன்படுத்தினர் என்று சொல்லப்பெறுகின்றது. ஆளுல், இந்த நூற்ருண் டின் தொடக்கத்திலிருந்துதான் இம்முறையின் செய்முறைப் பயன் பொதுவாக நன்கறியப் பெற்றுள்ளது. நன்கு தேர்த் தெடுக்கப் பெற்ற ஓர் ஆண் பிராணியின் விந்துவினைக் கொண்டு ஏராளமான பெண் பிராணிகளை சினப்படுத்தி விடலாம். கவனமாகச் சேகரிக்கப்பெற்ற விந்துப் பாய்மத் தைத் தக்க பாதுகாப்புடன் தொலைவிலுள்ள இடங்கட்கும் அனுப்பலாம். இதல்ை தொலைவிலுள்ள பெண் பிராணி களும் சினையாவதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது. இன்று உல கெங்கும் இம்முறையைக் கையாண்டு உயர்ந்த வகை ஆடு மாடுகளும் குதிரைகளும் பிறப்பிக்கப்பெறுகின்றன. உடற் கறுபற்றிய சங்கடத்தால் பொலிய முடியாத நிலையிலுள்ள கருத்தரியாப் பிராணிகளிடமும் இம்முறையைக் கையாண் டுப் பெண் பிராணிகளை ஈனும்படி செய்கின்றனர்.

மனிதர்களிடம் இம்முறை: சற்றேறக்குறைய 150 ஆண்டு கட்கு முன்னர் ஜான் ஹண்டர் என்ற ஆங்கில மருத்துவ அறிஞர் செயற்கையாக வித்துங் பாய்ச்சும் முறையை மணி தர்களிடம்கையாண்டார். எனினும் அதற்கு எழுபதுயாண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/334&oldid=1285239" இலிருந்து மீள்விக்கப்பட்டது