பக்கம்:இல்லற நெறி.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332

இல்லற நெறி


தெரியவந்தது. தன்னுடைா குறையினுல் தன் கணவனுக் குக் குழந்தை இல்லாதிருப்பது நியாயமல்ல என்பதை உணர்ந்துவருந்தினுள் பல மாதங்கள் தன் கணவனுடன் கலந்து ஆலோசித்துத் தன்னுடைய கணவன் விந்துவினைக் கொண்டு யாராவது ஒரு பெண்ணைக் கருவுறச் செய்வ தென்று முடிவிற்கு வந்தாள். செயற்கையாக விந்தணுப் பாய்ச்சும் முறையில் கருவுற முன் வரும் பெண்ணுக்குப் பணம் கட்டணமாகத் தருவதற்கும் ஒருப்பட்டாள் இப் பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தையைத் தன் கணவனிடம் தத்துவிட வேண்டும் என்பதே இவள் விதித்த நிபந்தனை. இவ்வரலாறு விளுேதமாக இருக்கின்றதல்லவா? மக்கட் பேறு வேண்டும் என்ற உணர்ச்சி எவ்வளவு நுட்பமானது என்பதை எண்னத் தோன்றுகின்றதன்ருே? இதனுல்தானே இந்த துண்ணிய உணர்ச்சியைத் தரும் மக்கட்பேற்றினைப் பெரிதும் புகழ்ந்தார் வள்ளுவப் பெருந்தகை? அவரை பொட்டிப் பிற்காலப் பெருங்கவிஞர்களும் அப்பேற்றினை மிகவிரிவாகப் பாராட்டியுள்ளனர். மக்டுகால் என்ற உள வியலறிஞரின் கருத்துப்படி அடிப்படை இயல் பூக்கங்கள் பதிதான்கி துன் மகலுக்கமும் ஒன்றல்லவா?

இவ்விடத்தில் அமெரிக்காவில் ஹார்வார்டு என்ற இடத் தில் இரு உயிரியல் அறிஞர்கள் மேற்கொண்டே ஒரு கவர்ச்சி கரமான சோதனையையும் கூற விரும்புகின்றேன். அவர்கள் ஒரு பெண் குழிமுயலிடமிருந்து பத்து முட்டையணுக்களை அகற்றி அவற்றுடன் ஒர் ஆண் குழிமுயலின் விந்துவைச் சேர்த்துக்கருவுறச் செய்தனர். அதன் பிறகு இக்கருவுற்றமுட் டைகளை இன்குெரு பெண் குழிமுயலின் கருக்குழல்களில் பதியச் செய்தனர்; இம்முட்டைகள் பெண் குழிமுயலின் உடலினுள் வளர்ந்தன. முப்பத்து மூன்று நாட்கள் கழிந்த

32. ložGars–Mac Doughal 53. un sgi šesth.--Parental instinct 54 gosportfourthG-Harvard 55 : stál (upitiéờ–Rabbit

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/338&oldid=1285241" இலிருந்து மீள்விக்கப்பட்டது