பக்கம்:இல்லற நெறி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

இல்லற நெறி


2

அன்பு நிறைந்த செந்தில்வேலனுக்கு, நலன். நலனே விழைகின்றேன்.

சென்ற கடிதத்தில் திருமணம் என்ற தெய்விக ஏற் பாட்டின் முக்கிய நோக்கங்களைப்பற்றிக் குறிப்பிட்டிருந் தேன். காதல், இடையறவு படாத நட்பு, இணை விழைச்சு, இனப் பெருக்கம் போன்ற நோக்கங்களின் அடிப்படையில் திருமணம் ஏற்பாடு செய்யப்பெறுமாயின், அந்த ஏற்பாடு வெற்றியுடன் திகழவேண்டும். இத்தகைய தெய்விக ஏற் பாட்டைச் செய்துகொண்ட எத்தனையோ மணமக்களின் வாழ்க்கை மண-முறிவில் முடிந்ததை நீ அறிந்திருப்பாய். உங்களுரிலுள்ள பழநிவேலுவின் வாழ்க்கையே இதற்கு ஒர் எடுத்துக்காட்டாகும். பணக்காரக் குடும்பத்தில் பிறந்து கல்வியின்றி வாழ்க்கையில் எந்தவிதக் குறிக்கோளுமின்றிக் காமுகளுகத் திரிந்தவனுக்குக் கல்வி, அழகு, ஏனைய குணப் பண்புகள் நிறைந்த மைதிவியைத் திருமணம் புரிவித்த தல்ைலவோ அந்த நிலை ஏற்பட்டது? இதிலிருந்து வாழ்க்கை செம்மையுற அமையவேண்டுமாயின் செல்வ நிலை ஒன்று மட்டிலும் போதாது என்பதை அறிந்துகொள் வாயாக. எனவே, திருமணம் வெற்றிபெற வேண்டுமாயின் மன மக்களின் உள்ளக் கிளர்ச்சிகள் அமைதியுடனும் முற்றிய நிலையிலும் இருக்கவேண்டும்; இருவருக்கும் பாலுணர்ச்சிகள், கவர்ச்சிகள் ஒத்திருக்கவேண்டும். உட லுறுப்புக்களின் முதிர்ச்சியும் இயன்றவரை பொருந்து

14. Losor-Gypsoal—Divorce. 15. sr-gitarrġ starff #5? –Emotion. 16, gp5ifáà–Maturity;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/34&oldid=1285092" இலிருந்து மீள்விக்கப்பட்டது