பக்கம்:இல்லற நெறி.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340

இல்லற நெறி


கருப்பம் ஏற்படுவதற்கு முன்னர் கவனம் எடுத்துக் கொண்டாலும், கரு வெளிப்படும் என்ற அறிகுறிகள் தோன்றினவுடன் தக்க ஏற்பாடுகளை எடுத்துக் கொண்டா லும் இச்செயலேத் தக்க முறையில் தடுத்துவிடலாம். சூல் கொள்ளும் காலத்தில் தாயின் உடல் நன்னிலையிலிருப்பதற் கேற்ப, தொந்தரவுகளின்றிக் கருப்பக் காலம் முற்றிலும் கழியும். ஆகவே, கருப்பம் ஏற்படுவதற்கு முன்னர் உடலே நன்கு சோதித்தக்கொண்டால், இடையில் எந்தவிதமான இயல்பிகந்த கோளாறுகள் ஏற்பட்டாலும் அவற்றை எளி தில் நிவர்த்தி செய்துகொள்ளலாம்: கரு வெளிப்படுவதற்கு முன்னர் யோனிக்குழலில் குருதிக் கசிவு தோன்றும்; அடி வயிற்றிலும் முதுகிலும் அதிகமான வலியுண்டாகும். படுக்கையிலிருந்து உடனே ஒய்வு எடுத்துக் கொள்ளுவதா லும் தக்க ஹார்மோன்களையும் வலி தீர்க்கும் மருந்துகளை யும் உட்கொள்வதாலும் கருவினை வெளிப்பட்ாது தடுத்து விடலாம்:

இவ்விடத்தில் இன்னுெரு செய்தியையும் நீ அறிதல் வேண்டும். குருதி கசிவு தோன்றியதனலேயே கரு வெளிப் படுவதற்குரிய அறிகுறி என்று கொள்ளவும் கூடாது: உண்மையில் கருப்பமுற்ற பெண்கள் மூன்றில் ஒரு பங்கு பேர்களிடம் கருப்பத்தின் தொடக்கக் காலத்தில் குருதிக் கசிவு அல்லது குருதியொழுக்கு நேரிடுகின்றது. இவர்களில் பெரும்பாலோர் நன்னிலையில் இருந்து நன்முறையில் குழந் தைகளைப் பெறுகின்றனர். கருப்பம் ஏற்பட்ட பின்னரும் தொடக்கத்தில் ஒரு சில பெண்களிடம் மாதவிடாய்ஒழுக்கு காணப்படுகின்றது என்று நான் முன்னர்க் கூறியதை ஈண்டு நினைவு கூர்வாயாக ஆனால், இந்த ஒழுக்கு மிகக் குறை வாகவே இருக்கும். இத்தகைய ஒழுக்கு கருவெளிப்படுவதற் குரிய அறிகுறியாக இல்லையென்ருலும் கருப்பகாலத்தில் ஏற் படும் இதனை உடனே மருத்துவரிடம் காட்டிச் சோதித்துக் கொள்ள வேண்டுவது மிகமிக இன்றியமையாதது.

ஒரு பெண்ணிடம் ஒரு தடவை காலத்திற்கு முன்னதாக 72. வலி தீர்க்கும் மருந்து-Sedative

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/346&oldid=1285246" இலிருந்து மீள்விக்கப்பட்டது