பக்கம்:இல்லற நெறி.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட்பேறு 843

என்பது வெளிப்படை. எனவே, பொருளாதார நெருக்கடி வேலையில்லாத் திண்டாட்டம், திருமணம் ஆவதில் ஏற்படும் சங்கடங்கள், கணவனைத் துறந்தநிலை போன்ற எண்ணற்ற குடும்பப் பிரச்சினைகள் ஒரு பெண்ணைக் கருச்சிதைப்பதில் கொண்டு செலுத்துகின்றன என்பதை அறிவாயாக: இவ்வாறு செய்யப்பெறும் கருத்தடைகள் யாவும் சட்டப் படிக் குற்றமாகும்: பன்டைப் புறநானூறும், ஆன்முலை யறுத்த அறனில் லோர்க்கும் மாண் இழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும் குரவர் தப்பிய கொடுமை யோர்க்கும் வழுவாய் மருங்கிற் கழுவாயும் உள18 என்று கூறியுள்ளதை ஈண்டு நினைவு கூர்க. இக்குற்றத்திற் குத் தண்டனை கிடைத்தாலும், அதனுல் ஏற்படும் பாவத்திற் குக் கழுவாயே இல்லை என்று கவிஞன் கூறியிருப்பதிலிருந்து இது மக்களால் எவ்வளவு கொடுமையாகக் கருதப்பெற் நிருத்தல் வேண்டும் என்பது சிந்திக்கத் தக்கது. திருமண மாகாத குந்தி கர்ணனைப் பெற்ருெடுத்ததாலன்ருே அக் குழந்தையைப் பேழையில் வைத்து ஆற்றில் விட்டாள்?

இன்று கருவினைக் குலைப்பதற்கென்றே பலவித மருந்துச் சரக்குகளை மக்கள் உட்கொள்ளுகின்றனர்: இம்மருந்துச் சரக்குகள் யாவும் மாதவிடாய்த் தொந்தரவுகட்கென்று விற்கப்பெறுபவை. தாமதித்து ஏற்படும் மாதவிடாயைக் கருப்பம் என்று கொள்வதற்கில்லை. திடீரென்று வெப்பநிலை மாற்றத்திற்கு உட்படல், உடற்குறைகள், வலுக்கேடு, ! கலப்புணவு இல்லாக்குறை, சுரப்பிகள் செயற்படுவதில் குலைவுகள், உள்ளக் கிளர்ச்சி அழுத்தம், மனக்கவல் போன்றவைகளால் மாதவிடாய் பல நாட்கள் அல்லது பல வாரங்கள் தடைப்பட்டு நிகழலாம். சில சமயம் மாத விடாய்த் தடைக்குரிய காரணங்களை நீக்குவதற்காகவும், மாதவிடாய் வட்டத்தை ஒழுங்கு படுத்துவதற்காகவும்

75. புறம்-34 76. algyáGasó-Debility.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/349&oldid=598309" இலிருந்து மீள்விக்கப்பட்டது