பக்கம்:இல்லற நெறி.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட்பேறு 845

ஆண்டுதோறும் 1000 பெண்கள் கருச்சிதைவு செய்வதனல் இறக்கின்றனர் என்று சொல்லப்பெறுகின்றது. இதைவிட அதிக எண்ணிக்கையைக் கொண்டவர் தீராத நோயுடனி ருக்கின்றனர். இத்தகைய முறையினை மேற்கொண்டவர் களில் பெரும்பாலோர் மலடாகப் போகின்றனர். பெரும்பா லும் இம்முறையினே மறைமுகமாகக் கையாளுவதலுைம், சுகாதார வசதியின்றிப் பயிற்சி மொதவர்கள் இதனை மேற் கொள்ளுவதனுலும் இத்தகைய இறப்பும் தீராத நோயும் விளைவுகளாகின்றன. பயிற்சி பெற்ற மருத்துவர்களைக் கொண்டு இதனைச் செய்தால் ஓரளவு விபத்துகளைத் தடுக் கலாம். என்ற போதிலும் கருச்சிதைவு செய்வதென்பது ஒரு சிறிய செயலன்று. அது தாயின் உடலுக்கும் உள்ளத்திற்கும் பேரதிர்ச்சியைத் தரக் கூடியதாகும்.

கருச்சிதைவு செய்தல் என்பது இன்று நேற்றுவந்தசெய லன்று. நினைப்பிற்கெட்டாத நெடுங்காலமாகவே இது நடைபெற்று வரும் செயலாதலின் நீதி நூல்களிலும் காவி யங்களிலும் இது குறிப்பிடப்பெறுகின்றது. மக்கள் தொகையைக் குறைப்பதற்காக கருச்சிதைவுடன் சிசுக் கொலையையும் செய்யப்பெற்று வந்ததாகக் குறிப்புகள் காணப்பெறுகின்றன. ஆணுல், நாகரிகம் மிக்க தற்காலத் தில் இஃது எங்கனும் பெரு வழக்காக இருந்து வருகின்றது. நம் நாட்டில் கற்றவர்களும் கல்லாதவர்களும் இதனை மேற் கொண்டதால் தாய் இறந்து கணவனையும் பல குழந்தைகளே யும் பரிதவிக்க விட்டுப்போன சோகக் கதைகள் பலப்பல. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் மட்டிலும் ஐந்து அல்லது ஆறு கருப்பிணிகளில் ஒருவர் இம்முறையை மேற்கொள்வதாகவும் பெரும்பாலும் இது நகர்ப்புறங்களிலேயே இருந்து வருகின் றது என்றும் புள்ளி விவரங்களால் அறிகின்ருேம். இதல்ை பெண்ணுக்கு ஏற்படும் பெருத்திங்குடன் இதல்ை விளையும் உயிரியல் பொருளாதார நட்டத்தைக் கணக்கிட்டால் இஃது

79, Géoé Q&tào-Infanticide.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/351&oldid=598315" இலிருந்து மீள்விக்கப்பட்டது