பக்கம்:இல்லற நெறி.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346

இல்லற நெறி


ஒரு பெரிய ஆபத்தான சமூக மருத்துவப் பிரச்சினையாக உள் ளது என்பது தெரிய வரும்.

கருச்சிதைவுக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம்: சில நாடு களில் கருச்சிதைவு செய்தல் சட்டபூர்வமாக அங்கீ , rரம் ஆகியுள்ளது. இரஷ்யாவில் சோவியத் ஆட்சி ஏற்பட்டி சிறிது காலத்திற்குள்ளேயே-1920இல்-இது சட்டப்படி அங்கீகாரம் ஆயிற்று. அக்காலத்திலிருந்த சமூக பொருளா தார நிலைமைகளின் காரணமாகக் கருத்தடையில் இறங்கிய பெரும்பான்மையான பெண்களின்சுகாதாரத்தைக் காக்கும் பொருட்டு இதனே ஒரு பொதுச் சுகாதாரத் திட்டமாகவே மேற்கொள்ளப் பட்டதாகக் கூறினர். பெண்ணின் உடல் நலத்தைப் பேணுவதற்காகவே தலைமறைவில் செய்யப் பெற்ற இச்செயலைப் பயப்படாமல் எவரும் மேற்கொள்ள லாம் என்று சோவியத் ஆட்சியினர் சட்டம் இயற்றினர். இதற்காகப் பிரத்தியேகமாக அரசினர் மருத்துவமனைகள் நிறுவப்பெற்றுக் கருச்சிதைவினைச் செய்வதற்கென்றே கை தேர்ந்த மருத்தவர்கள் நியமிக்கப்பெற்றனர். அறுவை முறையை மேற்கொண்ட பிறகு ஒருபெண் மூன்று நாள் கம். டாயம் மருத்துவமனையில் தங்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. எனினும், மூன்று மாதத்திற்கு மேற்பட்ட கருப் பத்தையும், ஒரு பெண்ணுக்கு முதன் முதலாக ஏற்பட்ட கருப்பத்தையும் சிதைப்பதற்கு இச்சட்டம் இடங்கொடுக்க வில்.ை

சோவியத் சட்டத்தினுல் கருச்சிதைவு காரணமாக இறந்த பெண்டிரின் எண்ணிக்கை குறைந்தது என்பது உண் மையே. எனினும், தக்க மருத்துவக் கண்காணிப்பில் செய் யப்பெறும் கருச்சிதைவுகளும் பெண்ணின் உடல் நலத்தைப் பாதிக்காது விடுவதில்லை என்பது சிறிது காலத்திற்குப் பின் னர் அறியப்பெற்றது. இதல்ை சில பெண்களுக்குப் பல் வேறு விதமான உடற் குறைகள் நேரிட்டன. இதல்ை சுகா தாரத் துறையினர் கருச்சிதைவு செய்வதால் ஏற்படக் கூடிய பல்வேறு தீங்குகளையும் விபத்துகளையும்பற்றி மக்களி டையே பிரசாரம் செய்யத் தொடங்கினர். இவர்கள் கருச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/352&oldid=1285249" இலிருந்து மீள்விக்கப்பட்டது