பக்கம்:இல்லற நெறி.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாயும்ஒளி நீயெனக்குப் பார்க்கும்விழி நானுனக்கு; தோயும்மது நீயெனக்குத் தும்பியபடி நானுனக்கு; வீணையடி நீயெனக்கு, மேவும் விரல் நானு னக்கு; பூணும்வடம் நீயெனக்குப் புதுவயிரம் நானுனக்கு; வானமழை நீயெனக்கு வன்னமயில் நானுனக்கு: பானமடி நீயெனக்குப் பாண்டமடி நானுனக்கு; வெண்ணிலவு நீ யெனக்கு, மேவுகடல் நானுனக்கு; பண்ணுசுதி நீயெனக்குப் பாட்டினிமை நானுனக்கு; வீசுகமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு; பேசுபொருள் நீயெனக்குப் பேணுமொழி நானுனக்கு; தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம் ஒருருவமாய்ச் சமைத்தாய் உள்ளமுதே! கண்ணம்மா!

-பாரதியார் கண்ணம்மா-என் காதலி-6.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/356&oldid=598325" இலிருந்து மீள்விக்கப்பட்டது