பக்கம்:இல்லற நெறி.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-6

திருமணக் கலை

மணமக்களிடையே நல்லுறவு ஏற்படுவதற்கு மன நிறைவுள்ள பாலுறவு மிகவும் இன்றியமையாதது. பன் டைக் காலத்தில் காதலும் இணைவிழைச்சும் தவருனவை களாகக் கருதப்பெறவில்லை. பண்டைக்கால சங்க இலக் கியங்களும் பிற்கால பக்தி இலக்கியங்களும் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். பழங்காலத்தில் பாலுறவு பற்றிய விவரமான செய்திகள் மூத்தோர்கள் மூலம் இளை ஞர்கட்கு அறிவிக்கப்பெற்றன. புணர்ச்சி தடைபெறுங்கால் ஆணுறுப்பிலும் பெண்ணுறுப்பிலும் பல்வேறு மாற்றங்கள் நடைபெறுகின்றன. முதற் புணர்ச்சியில் கணவனும் மனை வியும் கவனிக்கவேண்டிய பல செய்திகள் உள்ளன. பென் னின்டாலுள்ள கன்னிச் சவ்வினைக் கிழிப்பதில் விழிப்பு வேண்டும்; பழங்காலத்தில் இஃது ஒரு விழாவில் செய்யப் பெற்று வந்தது. மலரினும் மெல்லியது காமம்' என்பது வள்ளுவர் வாக்காதலின், தம்பதிகளின் பால் இணக்கம் நுட்பமாக அமைதல் வேண்டும். ஆணிடமும் பெண்ணிட மும் ஒரே அளவு பால் விருப்பங்கள் அமைந்து கிடப்பினும், புணர்ச்சியை ஒழுங்காக மேற்கொண்ட பிறகே அவை பெண்ணிடம் முழு வளர்ச்சி பெறுகின்றன. இணைவிழைச் சிற்கு முன்னர்த் தம்பதிகள் மேற்கொள்ள வேண்டிய பல செயல்கள் உள்ளன. தம்பதிகளின் உடலில் பால்வேம் கையைக் கிளர்ந்தெழச் செய்யக்கூடிய இடங்கள் உள்ளன. தம்பதிகள் அவற்றை அறிந்து பயன்படுத்துதல் அவர்தம் பால்வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது. கலவி இன் பம் சரியாக அமையவேண்டுமாயின் இருவர்பாலும் உச்ச

1, குறள்-1289

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/357&oldid=598327" இலிருந்து மீள்விக்கப்பட்டது