பக்கம்:இல்லற நெறி.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமணக்கலை §§§

களும் வழு வழுப்பான புாய்மத்தைச் சுரந்து வெளிப்புற மாகக் காணப்பெறும் பிறப்புறுப்புகளின் மேற்பரப்புக் களை நனைத்து ஆண்குறி ந்ன்கு எளிதாக நுழைவதற்குத் துணை செய்கின்றன; இந்த மாற்றங்களைத் தொடர்ந்து புணர்ச்சித் தூண்டலின் பொதுவான உடல், உள்ளக் கிளர்ச்சிபற்றிய மாற்றங்களும் வெளிப்படையாகப் புலனு கின்றன. வலுவானதும் விரைவ்ானதுமான நாடித்துடிப்பு , வேகமாக மூச்சு விடுதல், விந்த பாவைகள்: , சிவந்த முகம், அதிகப்படியான தச்ைச் செயல்கள். நரம்புக் கிளர்ச்சி-போன்றவை அவற்றுட் சில: இணைவிழைச்சின் இயக்கங்க்ள் உச்சநிலையை அடைந்துவிடுதலை பெறும்வரை காதல் உணர்வுகளையும் மிகுந்து வரும் மன நெருக்கடியை யும்? அவை மிக அதிகமாக உயர்த்திக் கொண்டே போகின்றன. இறுதியாக நாம் இன்பத்தின் கொடுமுடியை அடைந்து ஆயாசமாக இளைப்பாறுகின்ருேம்.

கன்னிச்சவ்வு கிழிதல்: முதற் புணர்ச்சிஅல்லது அதனைத் தொடர்ந்து நிகழும் சில புணர்ச்சிகட்கும் அடுத்து நிகழும் புணர்ச்சிகட்கும் சிறிது மாறுபாடு உண்டு. முதல் தடவை யாக அதனைத் தொடர்ந்து நிகழும் லெப் புணர்ச்சிகளில் கன் னிச் சவ்வு' துளைக்கப் பெறுகின்றது. இந்தக்கன்னிச் சவ்வு அகன்று விரியும்பொழுது அல்லது கிழியும்பொழுது-சிறி தளவு வலியும் உண்டாகலாம். இந்தச் சவ்வின் அமைப்பின் தன்மையையும் நிலையையும் பொறுத்து வலி அல்லது நலக் குறையின் அளவு இருக்கும் என்பது உணரத்தக்கது. கன் னிச் சவ்வு மெல்லியதாகவும் நீளுந்தன்மை யுடிையதாகவும் இருந்தால், அது கிறிது நலக்குறைவுடன் நன்கு அகன்று நீண்டு கொடுக்கும், அல்லது கிழிந்துவிடும்; அஃது உறுதி

35 நாடித்துடிப்பு-Pulse 36. tursosu-Pupil (eye) 37. Loew'G'ss(U)&#14–Tension 38. கன்னிச்சவ்வு-Hymen 39. Isswä65sop—Discomfort

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/371&oldid=598359" இலிருந்து மீள்விக்கப்பட்டது