பக்கம்:இல்லற நெறி.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368

இல்லற நெறி


முதல் நாள் புணர்ச்சி: முதல்நாள் புணர்ச்சியும் அஃது எங்ஙனம் மேற்கொள்ளப்பெற்றது என்பதும் ஒருபெண்ணின் எதிர்காலப் பால்வாழ்க்கையைப் பொறுத்தவையாகும். மிகச் சிறிய உள்ளக்குலைவும் உடற்குலைவும் ஒரு பெண்ணிடம் மறக்கமுடியாத விளைவுகளை உண்டாக்கி, உளவியல்பற்றிய போக்கு உள்ளவர்களிடம் பாலுணர்ச்சியே இல்லாதுசெய்து விடுதல் கூடும். இத்தகையோர் அடுத்துப் பாலுறவு கொள் வதையே வெறுப்பர். எது எப்படியிருப்பினும் முதற் புணர்ச்சி ஒரு பெண்ணுக்கு இன்பமாக இருப்பது அரிது என்பது வெளிப்படை. அதற்குக் காரணம் வலியும் குருதிப் பெருக்கும் உண்டாவதேயாகும். எனவே, முதல் நாள் புணர்ச்சியில் ஏதாவது தடையும் நலக்குறையும் இருக்கு மென்று கருதி கணவன் மனைவியைச் சற்று எச்சரிக்கை யாகவே அணுகவேண்டும். படிப்படியாக அநுபவமும் அன்னி யோன்யமும் ஏற்பட ஏற்படி இருபாலாருக்கும் திருப்தி யளிக்கத்தக்க முறையில் பாலுறவினை ஏற்படுத்திவிடலாம்.

திருமணத்தின்தொடக்கத்தில்பெரும்பாலான பெண்கள் பாலுறவிற்கு இடங்கொடுப்பதற்குச் சங்கடப்படுவர்; புணர்ச்சிக்கே இடங்கொடுக்காமலும் மறுப்பர்; இது நாணத் தின் காரணமாகவோ, அன்றி இளமையில் பெற்ற பயிற்கி, வளர்ப்பு ஆகியவற்றின் காரணமாகவோ, அல்லது நடை பெறக்கூடிய நலக்குறைவுகளைப் பலவாறு மிகைப்படுத்திய அச்சத்தின் காரணமாகவோ நேரிடலாம். திருமணத்திற்கு முன்னர் காதலுடாட்டம் நேரிட்டிருந்தால் அது பெண்ணி டம் நம்பிக்கையுணர்ச்சியை வளர்த்து அவள் பாலுறவு கொள்வதற்கு மேற்கொள்ளும்தடையைக் குறைத்தல்கூடும். எனினும், சிலசமயங்களில் மனைவிகணவன்மீது அன்புகொன் டிருந்தபோதிலும், அல்லது புணர்ச்சித் தழுவலுக்குத் தக அவள் துலங்குவதற்கு விரும்பினபோதிலும் திருமணம் ஆன பல நாட்கள்வரையிலும் இத்தடை மாருது நீடிக்கலாம்; உண்மையில் அவள் தன் கணவன்மீது ஆழ்ந்த கவர்ச்சியுடிை. யவளாக இருக்கலாம்; அவளிடமும் ஆழ்ந்த வன்மையான பாலுந்தல் இருக்கலாம்; எனினும், அவள் பாலுறவினின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/374&oldid=1285257" இலிருந்து மீள்விக்கப்பட்டது