பக்கம்:இல்லற நெறி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

இல்லற நெறி


குதுாகலம் ஏற்பட்டுள்ளது என்பதையும் அறிந்தேன். இதனுல் இளங்காதலரின் இன்ப வாழ்க்கையில் பெற்ருேரின் தலையீடு கூடாதெனத் தெரிகின்றதல்லவா? இதனால்தான் சில சமூகங்களில் திருமணம் கழிந்த பின்னர் இளங்காதலர் கட்குத் தனிக் குடும்பம் அமைத்துக் கொடுத்து மனையறம் படுத்துகின்றனர். இப்பழக்கம் வழி வழி வரும் ஒரு நற் பழக்கமாகும். இதனுல் மாமியார்-மருமகள் பூசல்கள் ஒரளவு ஒழிகின்றன.

குடும்பத்தின்மீதுள்ள அளவற்ற பற்றுதலும் தன் பெற்ருேர்மீதுள்ள பற்றுதலும் மன நிறைவு கொள்ளத்தக்க முறையில் திருமணம் வெற்றியடைவதற்குத் தடையாகுமா என்று நீ நினைக்கலாம். ஆம்; இதில் உண்மை இல்லாமல் இல்லை. சாதாரணமாகக் குடும்பத்தின்மீதுள்ள ஈடுபாடு28 அல்லது பற்றுறுதி திருமணத்திற்குரிய உள்ளக்கிளர்ச்சிப் பொருத்தத்தில் தலையிடக் கூடாது; ஒர் ஆடவன் திருமணத்திற்கு முன்னர் தனக்கிருந்த பொறுப்பையும், திருமணத்திற்குப் பிறகு தனக்குள்ள பொறுப்பையும் எடை போட்டு உணர வேண்டும்; புதிய உறவினல் தன்னுடைய குடும்ப ஈடுபாட்டில் ஏற்பட்டுள்ள புதிய திருப்பத்தை எண் ணிப் பார்க்கவேண்டும். புதிதாக மணந்துகொண்ட தம்பதி களுக்குச் சுதந்திரம் வேண்டும்; இவர்கள்.வாழ்க்கையில்பெற். ருேரின் தலையீடு-ஆக்கிரமிப்பு-கூடாது. அன்றியும், இளந் தம்பதிகள் தத்தமக் கிடையேயுள்ள பற்றுறுதியிலும், தம் பெற்றேரிடத்தே தமக்குள்ள பற்றுறுதியிலும்?? ஒரு சராசரி நிலையினை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். ஒன்றில்ை பிறி தொன்றைப் புறக்கணிக்கவோ வெறுக்கவோ கூடாது. இந்த மனநிலை வந்தவர்கட்குத்தான் உள்ளக் கிளர்ச்சிப் பொருத் தம் வந்துவிட்டது என்று கருதலாம். பெற்ருேளின்மீது கொண்டுள்ள அளவுக்குமீறிய பற்றுதலே பெரும்பாலோ ரிடையே உள்ளக் கிளர்ச்சிப் பொருத்தம் அமையாதிருக்கக்

26. FGusrú)—Devotion; 27. Lusoggyä-Loyalty;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/38&oldid=1285094" இலிருந்து மீள்விக்கப்பட்டது