பக்கம்:இல்லற நெறி.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374

இல்லற நெறி


32

அன்பார்த்த செந்தில்வேலனுக்கு,

நலன். நலன் அறிய அவா.

பசியும் பாலுறவும் : நன்ருக முதிர்ச்சி பெற்ற ஒருவரின் பாலுறவு வேட்கையைப் பசி வேட்கையுடன் ஒப்பிட்டுப் பேசலாம்: ஆல்ை, இரண்டிற்கும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. பசி வேட்கையில் முதன் முதலாக உண்ணப்பெறும் முதற் கவள உணவு மிக்க இன்பத்தை நல்கும்; கடைசிக் கவள உணவு உண்ணும் பொழுது இந்த இன்பம் குறைந்து கொண்டே வந்து இறுதியில் இல்லையாய் விடுகின்றது. பாலு றவு வேட்கையில் இதற்கு நேர்மாருன சொல் நிகழ்கின்றது. புணர்ச்சி வேட்கையால் துரண்டப்பெறும் முதற் செயல்கள் குறைவதில்லை; ஆனால், அதற்கு மாருகப் புணர்ச்சித் துடிப் பினைத் தீவிரமாக்குகின்றன; புணர்ச்சியின் இறுதிச் செயல் கள்தாம் நமக்கு முழு மனநிறைவினைத் தருகின்றன:

மகளிரின் பாலுக்கமும் தாய்மையூக்கமும் : மகளிர் பாலுள்ள பாலூக்கத்தைப்பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன. ஒரு சிலர் பாலூக்கம் என்பது ஒரு சமய ம் இணைவிழைச்சுத் துடிப்பும் பிரிதொரு சமயம் இனப்பெருக்கத் துடிப்பும் கலந்து பருவத் தோறும் எழும் ஓர் இயல்பூக்கம் என்று கருதுகின்றனர்; வேறு சிலர் முதலாவதை மட்டிலுமே கொள்ளுகின்றனர். இந்த இருசாராரும் தாய்மைத் துடிப்பினைப் பெண்ணின் பாலூக்கத்தின் ஒரு பகுதியாகக் கொள்வதில்: உண்மை யாக நோக்கினுல் தாய்மை யூக்கம் என்பது ஒரு குறிப் பிபி.ட எல்லைவரை பெண்ணின் பாலூக்கத்தின் ஒரு பகுதி

50: Lum sy po Garı: 6m *-Sexual desire. 5 l; ttrr GMT #sth-Sex institi

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/380&oldid=1285259" இலிருந்து மீள்விக்கப்பட்டது