பக்கம்:இல்லற நெறி.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8የ8 இல்லற தெறி

காலமே' என்று எழுதிப் போந்தார்; புணர்ச்சி விருப்பமுள்ள பெண்ணின் மேல் இழிந்த அவதூறு ஏற்றிச் செல்லப் பெற்று வந்தது. கம்பராமாயணத்தில் சூர்ப்பனகையின் படைப்பினை எண்ணிப் பார்ப்பாயாக. ஆக்டானைப் போலவே அக்காலத்து ஏனைய எழுத்தாளர்களும் அத்தகைய ஒரு கருத்தினையே கொண்டிருந்தனர். பால் துடிப்புபற்றிய தெளிவான அறிவினையுடைய இன்றைய அறிஞர்கள் அங்ங் ம்ை கருதுவதற்கு அடிப்படையே இல்லை என்கின்றனர். பால் விருப்பக்குறைவுடைமை, அல்லது அதுவே இல்லாமை ஆன் களைவிடப் பெண்களிடம் அதிகம் காணப்பெறுகிறதென்பது உண்மையே. ஆனுல், இதிலிருந்து பெண்களிடம் இயல் பாகவே காம உந்தல்5 இல்லையென்று கொள்வதற்கில்.ை தொடக்க நிலையில் பெறும் பயிற்சியும் சமூகக் கட்டுப்பாடு களும் பண்பாடும் பென்களிடம் சாதாரணமான பால்விருப் பத்தை வெளிவிடாமல் அடக்கி வைத்து விடுகின்றன; ஆகை யால் அவ்விருப்பம் பிற்கால வாழ்க்கையிலும் வெளிப்படை யாகத் தலைக்காட்டுவதில்லை. என்றபோதிலும், ஒரு பெண் வின் பால்விருப்பங்களும் ஆணின் பால் விருப்பகிகளைப் போலவே மிகவும் தீவிரமானவையே என்பதை நாம் உணர் தல் வேண்டும். ஹேவ்லக் எல்லிஸ் என்ற காமநூல் நிபுணர் பேண்ணின் பாலூக்கமும் தீவிரமானதே என்றும், ஆனல் அவன், ஒழுங்கான புணர்ச்சியை மேற்கொண்ட பிறகே அந்த இயல்பூக்கம் அவளிடம் முழுவளர்ச்சியை அடைகின் றது என்றும் கூறுகின்ருர்.

இருபாலாரின் உணர்ச் சிகளின் வேற்றுமைகள்: இனி, ஆணிடமும் பெண்ணிடமும் வெளிப்படும் காம உணர்ச்சி யின் தன்மைகளைப்பற்றிச் சிறிது கூறுவேன். கிம் டத்தட்ட உயிரினங்கள் எல்லாவற்றிலுமே ஆணிடம்தான் இவ்வு ாைர்ச்சி தீவிரழரகவும் ஆக்கிரமிப்புடனும் வெளியாகின்றது: பெண் அதஆேரற்கும் நிலையில் வாளா இருக்கின்றது. இத்த் கைய வேற்று மை பாலணுக்களிடமே காணப் பெறுவதை

54. strio 2-656)—Erotic urge,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/382&oldid=598383" இலிருந்து மீள்விக்கப்பட்டது