பக்கம்:இல்லற நெறி.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமணக் கலை 87ነ

முன்னரே எடுத்துக்காட்டியுள்ளேன். இந்தப் பால் அணுக் களிடம் காணப்படும் வேற்றுமைதான் ஆண்-பென்னிடம் வெளிப்படும் பாலுணர்ச்சியின் வேற்றுமைக்குக் காரண மாக இருக்குமோ என்றுகூட எண்ண வேண்டியுள்ளது. இந்த வேற்றுமை மூன்று நிலையில் வெளிப்படுகின்றது.

முதலாவது: ஆணின் பால் துடிப்பு எடுப்பாக-முனைப் பாகக்-காணப்படுகின்றது; அஃது எளிதில் எழுப்பிவிடப் பெறக்கூடியதாகவும் உள்ளது. அன்றியும், ஆணின் காம இச் சைகள் பால் உறவின் நிறைவேற்றத்தில் கொண்டு செலுத் தக் கூடியனவாக உள்ளன. ஆனல், பெண் முனைப்பற்ற வளாக-செயலுக்கு ஆளாக-இருக்கின்ருள்; அவளுடைய விருப்பங்களும் மெதுவாக எழுப்பப்பெறக் கூடியனவாக உள்ளன. அவைமெதுவாக முதலில்உடலுறவும் காதலுரடாம் டமும் கொள்ளக்கூடிய நிலையில்தான் வெளிப்படுகின்றன. ஒரளவு அவளிடிம் காமக் கிளர்ச்சி ஏற்பட்ட பிறகுதான் அவள் புணர்ச்சிநிறைவேற்றத் தயாராகின்ருள். ஆணைவிடப் பெண்ணிடமே உள்ளக் கிளர்ச்சியும் :ே லீடான உணர்ச்சியும் பால் எதிர்வினைகளிலும் பால் தலங்கல் வளி லும் மிகவும் குறிப்பிடத்தக்க பங்கினைப் பெறுகின்றன.

இரண்டாவது: பெண்ணின் மாதவிடாய் வட்டத்தில் பாலூந்தலின் தீவிரத்தில் தெளிவான சந்த இயக்கம் காணப் பெறுகின்றது. இது மாதவிடாய் வட்டக் காலத்தில் ஓர் ஒழுங்கான முறையில் அதிகரித்தும் குறைந்தும் வருகின்றது. ஆணிடம் இருப்பதுபோலத் தானுகக் கிளம்பும் உணர்ச்சி பெண்ணிடம் காணப்பெறுவதில்லை. அது மாதவிடாய் வட் டத்தில் தோன்றும் ஹார்மோன்களின் அளவுடன் தொடர்பு கொண்டுள்ளது. மாதவிடாய் தொடங்கும் சில நாட்களுக்கு முன்னரும், மாதவிடாய்வட்டத்தின் நடுப்பகுதியிலும்-முட் டையணு முதிர்ந்து வெளிப்படும் பருவத்திலும்-பெண் னிடம் புணர்ச்சி விருப்பம் அதிகமாகத் தோன்றுகின்றது.

55. இந்நூல்-பக்கம் 103 56, Gibso Lirsw 2-storff 39—Sentiment,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/383&oldid=598385" இலிருந்து மீள்விக்கப்பட்டது