பக்கம்:இல்லற நெறி.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378

இல்லற நெறி


இஃது இனப் பெருக்கத்திற்கு இயற்கையாகவே அமைந்து கிடக்கும் சாதகமான நிலை போலும்.

மூன்ருவது: புணர்ச்சியில் உச்சநிலை எய்தும் கால அள விலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் முக்கிய மாறுபாடு காணப் பெறுகின்றது. புணர்ச்சி வட்டக் காலம் ஆணிடம் மிகக் குறைவானது; தன்னைத் திட்டமான முறையில் அடக்கிக் கொள்ளாவிடில், அவனது உணர்ச்சி விரைவில் எழுப்பிவிடப் பெறக்கூடியதாக இருப்பதைப்போலவே, அவனது உணர்சிசி யின் உச்சநிலையை அடையும் காலமும் குறுகியுள்ளது. பெண்ணிடம் உணர்ச்சி கிளர்ந்தெழுவதற்கு அதிகக் காலம் வேண்டியிருப்பதைப்போலவே, அவளது உணர்ச்சியின் உச்ச நிலையை அடையும் காலமும் நீண்டுள்ளது. அவளது பால் எதிர்வினைகளும் ஆணினுடையவற்றைவிட அதிகமாகச்சிதறி யும் அதிகமாக மாறக்கூடியனவாகவும் உள்னன.

மேற்கூறிய மூன்றுநிலைகளிலுள்ள வேற்றுமையின் கால வேறுபாட்டுக் கூறில் மட்டிலும் பொருத்தப்பாடடையச் செய்யும் முறையை விளக்குவேன். இதைச் செய்துவிட்டால் பாலுறவில் இருபாலாரிடையேயும் நல்ல பொருத்தப்பாடு ஏற்பட்டுவிடும். ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும் மனப்போக்கு, இருவரிடையேயுள்ளஒத்துணர்ச்சி, உண்மை யான முயற்சி, மணமறிந்த கட்டுப்பாடு ஆகியவற்றினுல் தேவையான அளவு பொருத்தப்பாட்டினை எய்து விக்கலாம். பாலுறவு இருபாலாரிடையேயும் மனநிறைவு அளிக்கக் கூடிய அநுபவமாக மாறவேண்டுமாயின், பெண்ணின் காமத் துடிப்புகளைக் கிளர்த்தெழச் செய்து புணர்ச்சியை அவள் விரும்புமாறு செய்தல் வேண்டும்.

பெண்ணைப் புணர்ச்சிக்குஆயத்தப்படுத்தும் ஆணின் செயல் கள்: ஒரு பெண் புணர்ச்சிக்குத் தயாராவதற்குப் பல செயல்கள் முன்னதாக நடைபெற வேண்டியுள்ளன. இணை பயிலுதல் (காதலூடாட்டம்): 7, ஆண் பெண்ணை விரும்பி நூடுதல். தழுவி முத்தமிடல், வேறு காதல் விளையாட்டு

07. Qτ 21.33–Courtship

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/384&oldid=1285260" இலிருந்து மீள்விக்கப்பட்டது