பக்கம்:இல்லற நெறி.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமணக் கை 38 f

தொடர்புகளில் மிகவும் அந்தரங்கமான இத்துறைகளில் தனிப்பட்டோரிடம் தாளுகஎழும் உணர்ச்சி, அவர்களுடைய திறமை, ஒருவர் பிறிதொருவரைப் புரிந்துகொள்ளும் நிலை, இருக்கும் சூழ்நிலைக்கேற்ப நடந்துகொள்ளும் திறன் ஆகிய வற்றிற்கே அனைத்தையும் விட்டுவிடல் வேண்டும்.

பெண்ணின் உணர்வு எல்லைகள்: நுண்ணிக உணர் வுடைய அணுகும் முறையே உயர்ந்த அளவு காம இச்சையை எழுப்புவதற்குப் போதுமானது. எனினும், பெரும்பாலோ ரிடம் புணர்ச்சிக்கு முன்னதாக நேரடியான உடல் தான் டலையும் பயன்படுத்துதல் நல்லதாகும், பெரும்பாலும் இது தொடுதல், தழுவுதல், முத்தமிடுதல் ஆகியவற்றில் முடியக் கூடியது. ஒர் ஆணிடம் காம இச்சையை எழுப்பவல்ல பரப்புகள் ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது பகுதிகளில் இருப் பதுபோலன்றி, பெண்ணிடம் அத்தகைய இடங்கள் விரித்து இதறிக் கிடக்கின்றன. சாதகமான சூழ்நிலையில் உடலில் எந்த இடத்தைத் தொட்டாலும், காம உணர்ச்சி கிளர்த் தெழுதல் கூடும். காம இச்சை என்பது உயர் நிலையிலுள்ள தொரு புலன் அநுபவம் என்று ஓர் அறிஞர் கூறியுள்ளார். இதழ்கள், கழுத்து, காது மடல்கள், கொங்கைகள்-குறிப் பாக முலைக் கண்கள்-ஆகிய பகுதிகள் சிறப்பான உணர்வு எல்லைகளைக் கொண்டவை: வாத்ஸ்யாயனர் என்ற காம நூல் அறிஞர் நெற்றி, கொங்கைகள், இதழ்கள் ஆகியவற். றைத் தொடுபுலக் கலை இடங்களாகக் குறிப்பிட்டுப் பேசுவர்.

கல்லாதான் சொற்கா முறுதல் முலேஇரண்டும்

இல்லாதாள் பெண்காமுற் றற்று." என்ற குறளால் முலையிரண்டும் இல்லாத பெண்களிடம் காம உணர்ச்சி அதிகம் இராது என்ற குறிப்பை அறிகின்ருே

மன்ருே? மேலும், இயற்கைப் புணர்ச்சி இறுதிக்கன் தலை மகன்,

62. கலை இடங்கள் (கலாஸ்தானங்கள்)-Art spots. க3. குறள்-402

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/387&oldid=598394" இலிருந்து மீள்விக்கப்பட்டது