பக்கம்:இல்லற நெறி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண்ணப்பொருத்தம் 33

காரணமாகின்றது; இதனைத் தவிர வேறு பல காரணங் களும் உள்ளன. நரம்பு நோய் ஆளுமை அல்லது உள நோய் ஆளுமையைக் கொண்ட பலர் எந்த விதமான துணையுட னும்?? திருப்தியான மணப் பொருத்தப்பாடு அமைத்துக் கொள்ள இயலாத நிலையிலுள்ளனர். இன்னும் சிலரிடம் வலுக்கட்டாயம் செய்யும் மனப்பான்மை, தொந்தரவு செய் யும் இழிகுணம் ஆகியவை அமைந்திருக்கும் காரணத்தால் அவர்கள் உண்மை வாழ்க்கையிலிருந்து தப்பித்துக் கொள் வான் வேண்டிக் குடிவகைகளை மேற்கொண்டு தம்மையும் மறந்த நிலையிலிருக்கின்றனர்! வேறு சிலர் பாலுணர்ச்சியில் வழி விலகிச் சென்று பல நெறிகோணிய பாலுறவு பெற்று மகிழ்கின்றனர். இத்தகைய சந்தர்ப்பங்களில் உள்ளக் கிளர்ச்சிப் பொருத்தம்’ என்பது கருத்துடன் கவனிக்க வேண்டிய கூறு ஆகின்றது;

உடற் பொருத்தம் : "உடற் பொருத்தம்’ என்று முன் கடிதத்தில் குறிப்பிட்டேன் அல்லவா? அதையும் சிறிது உனக்கு விளக்கவேண்டும். கட்டும் அழகும் திரண்டு அமு தெனப் பொலியும் ஓர் இளங்கன்னியை உடல் நலன்பெருத ஒரு "தேரை மணந்தால் என்ன பயன்?

உடற் பொருத்தம் என்பது ஒர் ஆடவன் ஒரு பெண் னிடம் பாலுறவு கொள்ளும் திறன்-அஃதாவது கலவி புரியும் திறன்-ஆகும். இந்தப் பிரச்சினை பெரும்பாலும் ஆணைப்பற்றியதேயாகும்; சில பெண்களிடமும் இத்தகைய உடற்குறைகள் இருந்து அவர்கள் கலவிக்கே பொருத்தமிரா மல் இருப்பதுண்டு. பெரும்பாலும் ஆடவனின் கலவி புரியும் ஆற்றல்"குறைவாக இருப்பதே நாம் அடிக்கடி காணும்நிலை யாகும்; இக்குறையிருப்போர் கலவியில்-உடற்புணர்ச்சியில் -நிறைவேற்றம் செய்ய முடியாது. இத்தகைய குறையை

28. gås"—Mate:

29. கலவி புரியும் ஆற்றல்-Potency.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/39&oldid=598400" இலிருந்து மீள்விக்கப்பட்டது