பக்கம்:இல்லற நெறி.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384

இல்லற நெறி


முறைகளில் உடலைக் கையாளும் விதங்கள் G ఉ5ు பெற்றிருப்பதைக் காணலாம். இவை யாவும் Dడ్డి తి ಟ್ವೆಗ நடத்தையின் பால் கொண்டுள்ள உள்தடிைகளையும் அச்சத் தையும் களைந்தெறிவதற்கும் இவற்றுள் எந்தவகை விளை யாட்டிலும் இயல்பிகந்த செயல் ஒன்றுமில்லை என்று காட்டு வதற்கும் பெரிதும் பயன்படுகின்றன என்பதே என் கருத் தாகும். பாலுறவில் காணப்பெறும் வேறுபாடுகளுடன் அணுகும் முறை உயிரினங்களில் மனிதன் எந்த இனத்தைச் சேர்த்தவனே அந்த இனத்தின் நடத்தைக் கோலத்தின் ஒரு பகுதியாகும் என்பது சில அறிஞர்களின் கருத்தாகும். எனினும், காமக்கலையில் புத்தக விதிகளைப் பின்பற்றிக் கலவி புரிவதென்பது இயலாத செயலாகும்; அது விரும்பத் தக்கதுமன்று. ஒவ்வொருவரும் தன்னுடைய யுக்தியையும் திறமையையும் பயன்படுத்தி ஒரு முறையை வகுத்துக்கொள் வதே அறிவுடைமையாகும்; அதுவே பாலுறவினைப் பயன் படச் செய்யும் முறையுமாகும்.

இணைவிழைச்சில் மனைவியின் அசட்டை கூடாது : சிலர் புத்தகங்களில் படிக்கும் புணர்ச்சி முறைகளையெல்லாம் பள்ளியறையில் நடைமுறையில் கையாள முயலுகின்றனர்! இதனால் தாம்பத்திய உறவு செயற்கை முறையில் அமைந்து இருவருமே அதனை நன்கு அநுபவிக்க முடியாமல் போகின் நறது. கலவிப் பொருத்தப்பாடு அமைவதில் தனிப்பட்டோ ரின் கற்பனையும் கலவிபுரியும் விருப்பமுமே முக்கியமாக வெளிப்படுதல் வேண்டும். தம்பதிகள் மிக நெருங்கி இணைந்து கலவி புரியுங்கால், மனைவி அசையாது வாளா இருக்கவேண் டியதில்லை; அங்ங்ணம் இருக்கவும் கூடாது. பெரும்பாலும் பெண்கள் தாம் புணர்ச்சியை விரும்பிலுைம் கணவன்மார் தம்மைக் கலவிக்கு இணங்கச் செய்வதையே விரும்புகின்ற னர் என்பது வெளிப்படை. இதல்ைதான் கவிஞர் செயங் கொண்டார் பெண்களின் இந்த மனநிலையைக் காட்டு வதற்கு,

66, 2-diogo t--Inhibition

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/390&oldid=1285263" இலிருந்து மீள்விக்கப்பட்டது