பக்கம்:இல்லற நெறி.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388

இல்லற நெறி


33

அன்பார்ந்த செத்தில் வேலனுக்கு, நலன். நலன் வேண்டுவல்.

சிருங்காரம்: காதல் உணர்ச்சி இலக்கியங்களில் பல் வேறு விதமாகப் போற்றப்பெற்றுள்ளது. ஒன்பது சுவை களில் (நவரசலங்களில்) சிருங்காரம்தான் (உவகைச் சுவை தான்) அதிகமாக இலக்கியங்களில் காணப்பெறுகின்றது. வடமொழி வாணர்கள் சிருங்காரத்தையே முதல் சுவை யாகக் குறிப்பிட்டுள்ளனர். கவிஞர்கள் இச்சுவையைக் கையாண்ட விதத்தையும், பொதுவாக நமது இலக்கியங் களை இச்சுவை ஆட்கொண்டிருக்கும் நிலையையும் நோக்கியே இதனை ரஸங்களின் மன்னன்' என்று அறிஞர்கள் வழங்கும் படியும் நேர்ந்தது! மாணிக்கவாசகர் போன்ற ஞானச் செல்வர்களும் சிற்றின்பத்தின் மூலம் பேரின் பத்திற்கு வழி காட்டியுள்ளனர். கலவியின்பத்தைச் செவிலியின் கூற்ருக இவ்வாறு கூறுவர் அப்பெருமான்:

ஆனந்த வெள்ளத் தழுந்துமோர்

ஆருயிர் ஈருருக்கொண்(டு) ஆனந்த வெள்ளத் திடைத்திளைத் தாலொக்கும் அம்பலஞ்சேர் ஆனந்த வெள்ளத் தறைகழ

லோன் அருள் பெற்றவரின் ஆனந்த வெள்ளம்வற் ருதுமுற்

ருது இவ் வணிநலமே."

என்ற பாடலைப் படித்தின்புறுக, காதலனும் காதலியும் கலவியின்பத்தில் அழுந்தியிருக்கும் நிலை பேரின்ப வெள்ளத் தில் அழுந்தியிருக்கின்ற ஒர் உயிர் அப்பேரின்பத்தை

سیسم--ممت

69. திருக்கோவையார்-861.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/394&oldid=1285265" இலிருந்து மீள்விக்கப்பட்டது